'நிறைமாத கர்ப்பிணி'... 'எந்நேரமும் பிரசவம் என்ற நிலை'... 'இந்தியாவின் முதல் கொரோனா சோதனைக் கருவிக்காக'... ‘இளம் பெண் விஞ்ஞானியின் அசரடிக்கும் சாதனை’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முதல் கொரோனா சோதனைக் கருவிப் பணியில் ஈடுபட்ட பெண் விஞ்ஞானி குறித்து சுவாராஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் ஒருவருக்கு பரவியுள்ளதா என்பதை உறுதி செய்யவே இப்போதுள்ள வசதியின்படி ஒருசில நாட்கள் ஆகின்றது. எனவேதான் கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் வரை சந்தேகம் உள்ளவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இதையடுத்து இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் சோதனைக் கருவி புனேவைச் சேர்ந்த மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இந்தக் கருவியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் மினால் தாகேவ் போஸ்லே என்ற பெண்ணும் ஒருவர். இவர், நிறைமாத கர்ப்பத்துடன் இரவு பகல் பாராது உழைத்து, வெறும் 6 வாரங்களில் உருவாக்கியுள்ளார்.
3 அல்லது 4 மாதங்கள் என்று சொல்லப்பட்ட நிலையில், இவ்வளவு சீக்கிரம் உருவாக்கியதுடன், பிரசவத்திற்காக மாலை மகப்பேறு மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னர் சோதனைக் கருவியை National Institute of Virology (NIV) -க்கு மதிப்பீடு செய்வதற்காக மார்ச் 18-ம் தேதி அனுப்பிவிட்டு சென்றுள்ளார். இந்த விநியோகம் முடிந்த அடுத்தநாள் தனது மகளை பெற்றெடுத்துள்ளார் இந்த பெண் விஞ்ஞானி.
இவர்கள் கண்டுப்பிடித்த கொரோனா சோதனைக் கருவியின் மூலம் இரண்டை மணிநேரத்தில் கொரோனா இருக்கிறதா, இல்லையா என்று கண்டறிந்து கொரோனா பரவரை தடுக்க முடியும். மேலும், தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை செய்ய ரூ. 4,500 கட்டணம் நிர்ணயித்து வரும் நிலையில், இனி இந்த கருவி மூலம் ரூ. 1,200-க்கு கண்டுபிடிக்க முடியும். இதுகுறித்து, மினால் கூறுகையில், கொரோனா அவசரநிலையில் நாம் இருக்கும்போது, அந்த சவாலை ஏற்று இந்த கருவியை கண்டுப்பிடித்தோம். தேசத்திற்கான எனது அர்ப்பணிப்பு என்று தெரிவித்துள்ளார். இவருக்கு ஆனந்த் மகிந்திரா தலைவர் உள்பட பலர் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.