'இப்போ நிறைய நேரம் இருக்கு'...'17 நாள் கண்டிப்பா பண்ணுங்க'... வீடியோ வெளியிட்ட சைலேந்திர பாபு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 28, 2020 05:00 PM

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரசால் மிகப்பெரிய பாதிப்பைத் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய நோய்த்தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அலுவலகங்களில் வேலை செய்வோர் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்கள்.

Corona Lockdown : DGP Sylendra Babu released a video about Stretching

இதனால் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் உணவு மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக உடல் எடை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பல்வேறு வல்லுநர்கள் எச்சரித்துள்ளார்கள். எனேவ வீட்டிலிருந்தே எளிய உடற்பயிற்சியினை மேற்கொள்ளப் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தச்சூழ்நிலையில் ரயில்வே மற்றும் தீயணைப்புத் துறை இயக்குநரான சைலேந்திர பாபு ஐபிஎஸ், இனிவரும் 17 நாட்களும் காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய ஸ்டரேட்சிங் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இது சமூகவலைத்தளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags : #CORONAVIRUS #CORONA #TAMILNADUPOLICE #CORONA LOCKDOWN #SYLENDRA BABU IPS #DGP #STRETCHING