தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார்...? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் கூறுவது என்ன...?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல், புதுவை, கேரளா சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்டவை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது அதன்படி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து ரிபப்ளிக் டிவி மற்றும் சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி திமுக கூட்டணி 160 முதல் 170 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி 58 முதல் 69 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமமுக 4 முதல் 6 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகள் வரையிலும் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று திமுக தான் ஆட்சியமைக்கும் என டைம்ஸ் நவ் - சி வோட்டர் நடத்திய வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 234 பேரவைத் தொகுதிகளில் 160 முதல் 172 இடங்களைத் திமுக கூட்டணி கைப்பற்றும் என்றும் அதிமுக அணி 58 முதல் 70 இடங்களைக் கைப்பற்றும் என்றும் தெரிய வருகிறது.
இதேபோன்று தமிழ் முன்னணி தொலைகாட்சிகள் நடத்திய கருத்துக்கணிப்பில் 160 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு என கணித்துள்ளது.

மற்ற செய்திகள்
