“தலைசுத்திருச்சு-னு நிக்குறவங்களுக்கு மத்தியில்”.. “ உதயநிதி-யின் அனல் பறக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ட்வீட்!”

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 15, 2020 12:19 PM

சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50வது ஆண்டு மலரை வெங்கய்ய நாயுடு வெளியிட்டார்.

Udhayanidhi Stalin tweets after rajinikanths speech in thuglak

இதன் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட ரஜினிகாந்த்,  ‘மக்களுக்கு சேவை செய்வது தந்தைக்குரிய பதவி, அதை சோவுக்கு பிறகு சிறப்பாகவே குருமூர்த்தி செய்துவருகிறார். அதாவது துக்ளக் இதழை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கிறார். கருணாநிதியும் பக்தவச்சலமு துக்ளக் இதழை பிரபலப்படுத்தியவர்கள்’ என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து, ‘ஒருவர் முரசொலி வைத்திருந்தால் திமுக-காரன் என்பார்கள், ஆனால் துக்ளக் வைத்திருந்தால்தான் அறிவாளி என்பார்கள்’ என்றும் பேசினார்.

இந்நிலையில் நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்,

‘முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்’என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.

 

Tags : #RAJINIKANTH #POLITICS #THUGLAK #MURASOLI #UDHAYANIDHISTALIN