'செல்லப்பிராணிகள்' வாங்க 'ஆசையாய்' வந்த 'சிறுமி'!.. 'கடைக்காரர்' செய்த 'கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செல்லப் பிராணி வாங்கச் சென்ற சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி லாயிட்ஸ் சாலையில் மணிகண்டன் என்பவர் செல்லப் பிராணிகள் கடை வைத்திருக்கிறார். இவருடைய கடைக்கு மயிலாப்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செல்லப் பிராணிகள் வாங்குவதற்காக, கடந்த 13-ஆம் தேதி சென்ற போது கடைக்குள் வைத்து, கைகளை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் மணிகண்டன். இதேபோல் 30-ஆம் தேதியும் சிறுமியை மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் நடந்தவற்றை சிறுமி, தனது பெற்றோரிடம் கூற, அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் மணிகண்டனைக் கைது செய்து கொலை மிரட்டல், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மற்ற செய்திகள்
