‘ஸ்டெர்லைட் ஆலைய மறுபடியும் திறக்க அனுமதி கொடுங்க’.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய அனில் அகர்வால்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா அதிக தாமிரத்தை இறக்குமதி செய்யும் நாடாக இருக்கிறது. இந்த ஆலை மூடப்பட்டதால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி இருப்பதாகவும், இது புலம்பெயர் தொழிலாளர்களை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு அனைத்து வகையிலும் சுமார் 40 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தாமிர இறக்குமதியில் சீனா ஆதிக்கம் செலுத்துவதாகவும், அந்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 400% இறக்குமதி அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவின் தாமிர சந்தையை சீனா கைப்பற்ற முயற்சி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் மற்றும் தெர்மல் பவர் பிளாண்ட் சிறந்த தொழில்நுட்பங்களுடன் கூடிய சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத தொழிற்சாலைகள் என்றும், இவை இந்தியாவிற்கான கிரீடத்தின் முக்கிய ஆபரணமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற தங்களுடைய விண்ணப்பத்தை பிரதமர் ஏற்க வேண்டும் என வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மற்ற செய்திகள்
