இந்த மாதிரி 'ஸ்டிக்கர்' ஒட்டியிருக்க... வண்டிகள பிடிச்சு உடனே 'அத' பண்ணிடுங்க...! - அதிரடி உத்தரவு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Aug 24, 2021 12:08 PM

தமிழகம் முழுவதும் ஏராளமான தனியார் வாகனங்களில் அரசு வாகனங்களைப் போன்று ‘G’ அல்லது ‘அ’ எழுத்து உள்ளது. சிலர் Human Rights, Police, Press, Lawyer போன்ற சொற்களை ஸ்டிக்கரைக் கொண்டு ஒட்டிக்கொண்டு ஓட்டி வருகின்றனர்.

order to police check private vehicles with stickers

வாகனச் சோதனையின்போது இவர்கள் காவல் துறையினருக்கு சரியான ஒத்துழைப்பை வழங்குவதில்லை. இதுபோன்ற ஸ்டிக்கர்கள் அல்லது போர்டுகள் வைத்து வரும் வாகனங்களை போலீசாரும் பெரிய அளவில் சோதனை எதுவும் செய்யாமல் விட்டு விடுகின்றனர்.

ஆனால்,இதுமாதிரியான ஸ்டிக்கர்களை தங்கள் வண்டிகளில் ஓட்டிக்கொண்டு சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து இதுபோன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டிக்கொண்டு வரும் வண்டிகளை தடுத்து நிறுத்தி, சோதனை செய்ய காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழகம் முழுவதும் சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் காவல் துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது,

‘அ’ அல்லது ‘G', Human Rights, Police, On Govt. Duty, Press, Lawyer போன்ற ஸ்டிக்கர்கள் மற்றும் போர்டுகள் காணப்படும் வாகனங்களை சோதனை செய்து தனியாக அறிக்கை தயார் செய்ய வேண்டும். அதில் அவர்கள் வைத்துள்ள ஸ்டிக்கர் அல்லது போர்டின் குறித்த உண்மையான விவரங்கள் இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், S.No., Date & Time, Vehicle Registration No., User name, Address, Cell No., Office address, Designation, From, To, Vahan app details ஆகியவை இருக்க வேண்டும். இந்த வாகனங்களின் விவரங்களை தினமும் காவல் உதவி ஆணையர் அல்லது டிஎஸ்பிஅலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.' இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Order to police check private vehicles with stickers | Tamil Nadu News.