சைரன் வச்ச "போலீஸ்" வண்டி!.. கமிஷனர்னு சொல்றாரு!.. ID CARDல துணை ஆணையர்னு இருக்கு!.. கொத்தாக தூக்கிய போலீஸ்!.. திகில் பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்போலீஸ் ஸ்டிக்கருடன், சைரன் வைத்த பொலீரோ ஜீப்பில் வந்த போலி போலீஸ் கமிஷனரை போலீசார் கைது செய்த சம்பவத்தின் பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு லட்சுமிபுரம் டோல்கேட் அருகே பட்டிவீரன்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய, சைரன் வைத்த பொலீரோ ஜீப் ஒன்று வந்துள்ளது.
வாகனத்தின் பதிவு எண் பலகையிலும் அரசு வாகனம் என்பதைக் குறிக்கும் G என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், வாகனத்தின் தோற்றத்திலும் பதிவு எண்ணிலும் சந்தேகம் கொண்ட போலீசார், ஜீப்பை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது உள்ளே அமர்ந்திருந்த நபர், தான் சென்னை போலீஸ் கமிஷனர் எனக் கூறியுள்ளார். ஆனால், அவர் காண்பித்த காவல்துறை அடையாள அட்டையில் துணை ஆணையர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனடியாக காவல்துறைக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர், தீவிர விசாரணையில் அந்த நபர் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த விஜயன் என்பதும் போலி போலீஸ் என்பதும் தெரியவந்ததை அடுத்து, அவரைக் கைது செய்து, அந்த வாகனத்தையும், அதில் இருந்த ஒரு ஏர் கன் வகை துப்பாக்கியையும், மேலும் சில போலி அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, அவருடைய பின்னணி குறித்து தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.