'கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பேரு புகழ் எல்லாமே போச்சு'!.. போலீஸ் முன்னிலையில்... கத்தி கூச்சலிட்டு... கதறி அழுத ஷில்பா ஷெட்டி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jul 27, 2021 11:07 PM

ஆபாச பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக காவல்துறையை சுழற்றி அடிக்கிறது.

shilpa shetty cries shouts at raj kundra porn film case

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகி உள்ளார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். மேலும் சில செயலிகளிலும் ஆபாச படங்களை பதிவேற்றியதில் ராஜ்குந்த்ராவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து அதுகுறித்தும் விசாரிக்கின்றனர்.

ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். இதற்கிடையே, ராஜ்குந்த்ரா அலுவலக ஊழியர்கள் 4 பேர் 'அப்ரூவர்' ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆபாச படம் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா? என்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 6 மணி நேரம் நீடித்தது.

அதைத் தொடர்ந்து, ராஜ் குந்த்ராவை விசாரணைக்காக மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்பு புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு அதிகாரிகளால் ஏற்கனவே ராஜ் குந்த்ராவின் மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டி வரவழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் மும்பை  குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார். ஆனால், இந்த விசாரணையின்போது ராஜ்குந்த்ராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஷில்பா ஷெட்டி ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீஸ் விசாரணையின்போது ஆபாசப் படங்கள் தயாரிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜ்குந்த்ராவுக்கு தொடர்பு இல்லை என்று அழுத்தமாக நம்புவதாகக் கூறிய ஷில்பா ஷெட்டி, அது முழுக்க முழுக்க லண்டனைச் சேர்ந்த நபரால் நிர்வகிக்கப்பட்ட செயலி என்றும், பணம் முதலீடு மட்டுமே ராஜ்குந்த்ரா தரப்பில் செய்யப்பட்டது எனவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஹாட்ஷாட்ஸ் செயலியில் பதிவேற்றப்படும் மாடல்களின் படங்கள் மற்றும் தங்களுடைய ஓடிடி படங்களில் நடிக்க வரும் மாடல்கள், நடிகைகளுக்கான கவர்ச்சி கட்டுப்பாடு தளர்வு ஆகியவற்றை தொடர்பாக, ராஜ் குந்த்ரா நடத்தி வந்த வாட்ஸ் அப் குரூப்பில் கிடைத்த கடிதப் பரிவர்த்தனை நகலை ஷில்பா ஷெட்டியிடமும், ராஜ் குந்த்ராவிடமும் காட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த கடிதத்தில், 'ஓடிடி படங்களில் குறிப்பிட்ட நடிகையை வைத்து படம் எடுப்பதற்கு முன்பாக, அவரை பற்றிய குறிப்புகளை தயாரிப்பு நிறுவனமான தங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவரை இறுதி செய்வதில் ஹாட்ஷாட்ஸ் அணியின் முடிவே இறுதியானது. தேர்வாகும் நபர், சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்படுபவராக இருக்க வேண்டும். துணிச்சலான காட்சிகளில் மேலாடையின்றியும், பின்புறம் நிர்வாணமாகவும் நடிக்கக் கூடியவராக அந்த நடிகை இருக்க வேண்டும்' போன்ற விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

அதைப் பார்த்த ஷில்பா ஷெட்டி, இதுபோன்ற வரிகள் ஆபாசத்தை தூண்டக்கூடியவை கிடையாது என்றும், அவை படத்தின் கதைக்கு தேவைப்படும் கவர்ச்சி மட்டுமே என்றும், இதை நீதிமன்றத்தில் உரிய வகையில் தங்களுடைய தரப்பு வாதிடும் என்றும் தெரிவித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர், ஒரு மூத்த குற்றப்பிரிவு அதிகாரி, "இந்த விஷயத்தில் நடிகைக்கு இதுவரை எந்த தொடர்பும் இல்லை, எனவே மேலும் விசாரணை எதுவும் இருக்காது. இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டிக்கு எந்தப் பங்கும் இல்லை. இதுவரை, இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டியின் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. எனவே, நாங்கள் அவரை மீண்டும் விசாரிக்கப் போவதில்லை. ஹாட்ஷாட்ஸுடன் எந்த தொடர்பும் இல்லை" என்று அவர் கூறினார்.

இந்நிலையில், விசாரணையின் போது ஷில்பா ஷெட்டி உடைந்து கூச்சலிட்டார் என்றும், உணர்ச்சிபூர்வமான ஷில்பா தனது கணவரிடம் இந்த விஷயம் குடும்பத்தை மோசமாக  சித்தரிப்பதாகவும், பல ஒப்பந்தங்கள் பாதிக்கப்பட்டு, என்னை நம்பி விளம்பர ஒப்பந்தம் செய்தவர்கள் கூட பின்வாங்கி விட்டனர் எனவும்  ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்தராவை கடுமையாக திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒரு சம்பவத்தால் இத்தனை ஆண்டுகளாக தான் சம்பாதித்த பேரும், புகழும் அதளபாதாளத்துக்கு சென்று விட்டதாகவும் அவர் கூறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shilpa shetty cries shouts at raj kundra porn film case | India News.