‘உங்க செல்போன் ID-ஐ ஹேக் செஞ்சிட்டோம்’!.. வசமாக சிக்கிய 5 பெண்கள் உட்பட 26 பேர் கொண்ட கும்பல்.. அமேசான் பெயரில் அதிரவைத்த மோசடி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 13, 2021 07:40 PM

அமேசான் நிறுவனத்தின் பெயரில் போலி கால் சென்டர் நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Fake Amazon call centre busted in Delhi by Police

டெல்லியின் புறநகர் பகுதியான சுல்தான்புர் பகுதியில் 5 பெண்கள் உட்பட 26 பேர், அமேசான் நிறுவனத்தின் பெயரில் போலி கால் சென்டர் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் வாய்ப் (VOIP) என்ற சட்டவிரோத தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் உள்ள அமேசான் ஆப் பயனர்களுக்கு போன் செய்துள்ளார். அப்போது அவர்களது செல்போன் ஐ.டி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.

Fake Amazon call centre busted in Delhi by Police

சுமார் 7 மாதங்களாக இந்த போலி கால் சென்டரை நடத்தி, நாள் ஒன்றுக்கு 5 பேர் வரை ஏமாற்றியுள்ளனர். இதுவரை 1250 பேர் இவர்கள் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் சுமார் 4 கோடி ரூபாய் வரை இந்த கும்பல் சம்பாதித்துள்ளது.

Fake Amazon call centre busted in Delhi by Police

இந்த நிலையில், இந்த போலி கால் சென்டர் தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தொலைபேசி மூலம் பேசி ஏமாற்றிக் கொண்டிருந்ததை கையும் களவுமாக போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவர்களிடமிருந்து 29 கணினி, 2 இணைய மோடம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

Fake Amazon call centre busted in Delhi by Police

மேலும், விசாரணையில் கால் சென்டர் நடத்துவதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். தலைநகர் டெல்லியில் அமேசான் பெயரில் போலி கால் சென்டர் நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Fake Amazon call centre busted in Delhi by Police | India News.