பப்ஜி மதனுக்கு இறுகும் பிடி!.. தமிழ்நாடு போலீஸ் மாஸ்டர் ஸ்ட்ரோக்!.. சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆபாசப் பேச்சு, பண மோசடி உள்ளிட்ட புகார்களில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பப்ஜி மதன் வழக்கில் போலீசார் அடுத்த அதிரடியை அரங்கேற்றியுள்ளனர்.

யூடியூப் சேனல் மூலம் சிறார்களிடம் ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை சட்ட விரோதமாக ஆடி வந்த 'Madan OP' என்கிற மதன்குமார் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறைக்கு புகார் வந்தது. இதனையடுத்து பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் மதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது மதன் மீது ஆன்லைன் மூலமாக 159 புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து, சென்னை மத்திய சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்தது மட்டுமின்றி, ஆதரவற்றோருக்கு உதவுவதாகக் கூறி ஆன்லைனில் பணம் வசூலித்து மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே இரண்டு முறை ஜாமீன் கேட்டு மதன் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதனால் அவரால் ஒரு வருடத்திற்கு ஜாமீன் பெறமுடியாது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற செய்திகள்
