'காலை 7 மணிக்கு தொடங்கிய ரெய்டு...' 'மொத்தம் 21 இடங்களில்...' - முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் 'லஞ்ச ஒழிப்பு' போலீசார் 'அதிரடி' சோதனை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் விஜய பாஸ்கர். தற்போது கரூரில் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த சோதனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை போன்ற 21 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
இந்த திடீர் சோதனை குறித்து அறிந்த அதிமுக நிர்வாகிகள் தற்போது விஜயபாஸ்கரின் வீட்டின் வெளியே கூடி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்களை சமர்பித்துவிட்டு சோதனை செய்யுமாறு அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
