Kadaisi Vivasayi Others

நாசாவின் அடுத்த பிரம்மாண்ட திட்டம்.. விண்வெளி வீரர்களுக்கு வித்தியாச பயிற்சி.. - வைரல் புகைப்படம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Feb 10, 2022 09:35 AM

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா நேற்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விண்வெளி வீரர்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டது தான் இப்போது டாக் ஆப் த டவுன். விண்வெளி வீரர்கள் பயிற்சி செய்வதில் அப்படி என்ன ஆச்சர்யம் எனக் கேட்கலாம். அதற்கு பதில் இருக்கிறது.

NASA Shares Astronaut Training Picture in Dark Swimming Pool

கொரோனாவை செயலிழக்க செய்யும் புதிய வகை மாஸ்க்.. ஒரு லேயரில் தாமிர நானோ துகள்கள்.. விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு

நிலவுப் பயணம்

1960 களில் அமெரிக்கா - ரஷ்யா இடையே பனிப்போர் உச்சம் அடைந்திருந்த நேரம். ஒவ்வொரு துறையையும் தங்கள் வசமாக்கிக்கொள்ள அல்லது ஒவ்வொரு துறையிலும் புதிய சாதனைகளை படைக்க இரு நாடுகளுமே கடுமையாக போட்டிபோட்டுக்கொண்டு இருந்தன. அப்போது ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாகவே அப்போலோ திட்டத்தை கையில் எடுத்தது அமெரிக்கா .

நிலவுக்கு முதன்முதலில் மனிதர்களை அனுப்பிய நாடு என்னும் சாதனையைப் படைக்க அமெரிக்க பல்லாயிரம் டாலர்கள் செலவில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியது.

NASA Shares Astronaut Training Picture in Dark Swimming Pool

புருடா?

1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் நிலவுக்கான தனது பயணத்தைத் துவங்கியது. நிலவில் முதன்முதலில் காலடி வைத்து மகத்தான சாதனையைப் படைத்தார் நீல் ஆம்ஸ்ட்ராங். இருப்பினும், அமெரிக்காவின் நிலவுப் பயணம் கட்டுக்கதை என்னும் வாதம் வரலாறு முழுவதும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற உடனேயே மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

அதற்கான பயிற்சியில் தான் அமெரிக்காவின் நாசா இறங்கியுள்ளது. இருள் சூழ்ந்த மிகவும் ஆழமான நீச்சல் குளத்தில் நிலவுக்கு செல்ல உள்ள வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். நியூட்ரல் பயான்சி (Neutral Buoyancy) ஆய்வகத்தில் வீரர்கள் மேற்கொண்டுள்ள பயிற்சியின் போது  எடுக்கப்பட்ட படங்கள் இவை. இந்த ஆய்வகத்தில் விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்வாக் பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

நாசா Artemis திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்கள் நிலவின் தென் துருவ பகுதிக்கு செல்லும் போது இருள் சூழ்ந்திருக்கும். இங்கு சூரியனின் வெளிச்சம் இருக்காது. அதனால் அந்த சூழலுக்கான பயிற்சியை வீரர்கள் இந்த ஆய்வகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். வழக்கமாக நீச்சல் குளத்தில் பயன்படுத்தப்படும் ஃபில்டர் மணலுடன் சில சிறப்பு கலவைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

நடுவானில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்.. விமானத்துல எல்லாரும் தூங்கிட்டு இருந்த நேரம் பார்த்து.. பயணி செய்த காரியம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NASA (@nasa)

Tags : #NASA #ASTRONAUT #ASTRONAUT TRAINING PICTURE #DARK SWIMMING POOL #நாசா #விண்வெளி வீரர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. NASA Shares Astronaut Training Picture in Dark Swimming Pool | World News.