“இந்த 3 ஊர்க்காரய்ங்களா நீங்க?.. அப்ப உங்களுக்குதான் கைலாசா வருவதற்கு முன்னுரிமை!” - நித்யானந்தாவின் ‘சூப்பர் ஆஃபர்!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்கைலாசா நாட்டில் மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்களுக்கு வணிக செயல்பாடுகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

கைலாசா நாட்டை உருவாக்கி வருவதாக கூறிய நித்தியானந்தா, கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், தங்கத்தில் அச்சடிக்கப்பட்ட 5 விதமான கரன்சிகள் என அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
கைலாசா நாட்டில் ஹோட்டல் வைப்பதற்கு அனுமதி கோரி, மதுரையை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஒருவர் நித்தியானந்தாவிற்கு எழுதிய கடிதம் பற்றி நேரலையில் தோன்றி பேசிய நித்தியானந்தா, அவருக்கு அனுமதி உண்டு என்று கூறியிருந்தார்.
அத்துடன் கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அதிரடி சலுகையையும் அவர் அறிவித்துள்ளார். மேலும் திருவண்ணாமலை மலை அடிவாரத்தின் பல்வேறு பகுதிகளில், சிசிடிவி கேமிரா வைத்து தரிசனம் செய்து வருவதாகவும், ஆனால் அதே சமயம் அந்த சிசிடிவி சிக்னலை வைத்து கைலாசா நாட்டை கண்டுபிடிக்க முடியாது என்றும் சிரித்தபடி கூறினார்.

மற்ற செய்திகள்
