'குழந்தை பிறப்புக்கான மருந்து ரெடி! வர்றீங்களா?'.. 'நம்பி போன இளம் பெண்'.. 'சித்த மருத்துவர்' செய்த 'பதறவைக்கும்' காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 13, 2019 01:41 PM
சென்னை பட்டாபிராம், மேற்கு கோபாலபுரத்தில் வசிக்கும் ராஜா என்பவருக்கும் அவரது 28 வயது மனைவிக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், இருவருக்கும் குழந்தை பேறு இல்லாமல் இருந்து வந்தது.

கடந்த 6 மாதத்துக்கு முன்பாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ராஜா, கீழ்ப்பாக்கம் காலனியைச் சேர்ந்த சித்த மருத்துவர் அண்ணாதுரை என்பவரிடம் பச்சிலை வைத்தியம் எடுத்துக்கொண்டதை அடுத்து ராஜா குணமாகியுள்ளார். அப்போது ராஜாவுடன் அவரது மனைவியும் சென்றிருந்தார்.
இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை என்பதையும் அண்ணாதுரையிடம் இந்த தம்பதியர் கூற, அதற்கு அண்ணாதுரை தன்னிடம் அருமையான சிகிச்சைகள் உள்ளதாகவும், 6 மாதம் தான் கொடுக்கும் மருந்துகளை உண்ணவும் பரிந்துரைத்தார். மேலும் ஒரு முக்கியமான மருந்து வரவேண்டி உள்ளதாகவும், வந்தவுடன் போன் செய்கிறேன் வாருங்கள் என்றும் கூறியுள்ளார்.
அடுத்த சில நாட்களில், குழந்தை பிறப்பதற்கான முக்கியமான மருந்து வந்துவிட்டது, வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று ராஜாவுக்கு போன் செய்து அண்ணாதுரை கூறியுள்ளார். ஆனால் ராஜா அந்த சமயம் வெளியில் எங்கேயே வேலையாக இருந்ததால், தன் மனைவியை அனுப்பவதாகக் கூறியுள்ளார்.
அதை நம்பி ராஜாவின் மனைவி அண்ணாதுரையின் வீட்டுக்கு மருந்து வாங்கச் சென்றபோது, அவரை வரவேற்ற அண்ணாதுரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று, சற்றும் எதிர்பாராதபடி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். சுதாரித்த ராஜாவின் மனைவி அண்ணாதுரையை தள்ளிவிட்டு, தப்பியோடி வந்து போலீஸ் எண்ணான 100க்கு போன் செய்து புகார் கொடுத்தார். அதற்குள் அண்ணாதுரை தப்பி ஓடிவிட்டார். போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.
