கோவையை கலக்கும் ஐடி மன்னன் - INSPIRING டாக் - அந்த ஊர CHOOSE பண்ண என்ன காரணம் !

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Alagulakshmi T | Feb 08, 2022 02:03 PM

பிரபல தொகுப்பாளர் நீயாநானா கோபிநாத், கோவை ஐடி மன்னன் kovai.co சிஇஓ சரவணக்குமார் அவர்களுடன் சுவாரசிய கலந்துரையாடல்.

neeyanaana gopinath talk with kovai IT king saravanakumar

மிக வேகமாகவே பல முன்னணி நிறுவனங்களுடன் ஒருமித்த போட்டிபோட்டு தனக்கென ஒரு அங்கீகாரம் பெற்ற கம்பெனியான kovai.co. ஐடி துறை என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது சென்னைதான் அப்படி இருக்க நீங்கள் மட்டும் ஏன் கோவையை தேர்ந்தெடுத்தீர்கள் ?

நா வந்து கோயம்புத்தூர் பையன். கடந்த 2000ம் ஆண்டு வரைக்கும் நான் கோயம்புத்தூர்ல தான் படித்தது, வளர்ந்தது எல்லாமே, எனக்கு கோயம்புத்தூர் தவிர வேறு எதுவும் தெரியாது. வெள்ளிக்கிழமை எக்ஸாம் எழுதின அடுத்த நாளே இலண்டனுக்கு வேலைக்கு போயிட்டேன். அதனாலேயே எனக்கு அதிகமா கோயம்புத்தூர் மட்டும்தான் தெரியும். வேற எந்த ஒரு மாவட்டத்தைப் பற்றியும் அவ்வளவா தெரியாது என்று பதில் கூறுகிறார்.

10 ஆண்டுகளாக லண்டனில் இருந்தேன். எப்பயும் போல நானும் ஐடி துறையில் பணியாற்றினேன். 2010 அப்பதான் எனக்கு இந்த மாதிரி கம்பெனி ஸ்டார்ட் பண்ணலாம் அப்படின்னு தோணுச்சு. 2010ல லண்டன்ல தான் ஒரு ஐந்து பேர் கொண்ட குழுவாக ஆரம்பிச்சோம்.

அப்புறம் இதை விரிவுபடுத்தப்படுத்தலாம்னு  நினைச்சபோ, எங்க இந்த கம்பெனியை கொண்டு வரலாம்னு நினைக்கிறப்போ, பல பேர்கிட்ட இதுகுறித்த தகவல் கேட்டோம். அப்போ எல்லோரும் அதிகமா சொன்னது சென்னை, பெங்களூர் இந்த மாதிரி ஊர்களைதான். அப்ப தான் தோணுச்சு பல உதவிகள் வந்து கோயம்புத்தூரில் இருந்துதான் கிடைச்சிருச்கு, சரி ஏன் அங்கேயே பண்ணக்கூடாது, அப்படின்னு இங்கே இருக்கிறவர்களுக்கு இது ஒரு வாய்ப்பா இருக்கட்டும் அப்படினு 2013ல இங்கே ஸ்டார்ட் பண்ணோம்.

எங்களுக்கு இப்ப ரெண்டு ஆபீஸ் தான் ஒன்னு லண்டனில், மற்றொன்று கோவையில் இருக்கு. எங்கள் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 240 பேர் இருக்கோம், லண்டனில் பத்து பேர்தான் இருக்காங்க. லண்டனில் இருக்கும் கம்பெனிக்கும் கோவை லிமிடெட் என்ற பெயர் தான் இருக்கு. அது என்னனு தெரியல, நாங்க இந்த பெயரை அப்படியே ஒரு தொடர்ச்சியாக கொண்டு வந்துட்டோம்.

கோவையில் உங்கள் தொழிலுக்கான advandage என்ன? Disadvandage என்ன?

Disadvandage என்னனா 'man power' தொழில் தெரிஞ்சவங்க கிடைக்கிறது இந்த இடத்தில் உள்ள சிரமம். தொழில் நுட்பம் தெரிந்த பையனோ, பொண்ணோ சுலபமாக கிடைக்கிறது இல்ல, அதுதான் இங்க பார்க்கிற ஒரு பெரிய disadvantage.

Advandage என்னென்ன, மற்ற இடங்களில் ஒரு வேலைய விட்டு இன்னொரு வேலைக்கு சுலபமா மாறிடுவாங்க. ஆனால், இந்த இடத்துல கம்பெனி ஆரம்பிக்கிறதுக்கு இன்னொரு பெரிய காரணம், இந்த மாதிரியான இடங்களில் பணியாற்றுபவர்கள் அவ்வளவு சுலபமாக கம்பெனியை விட்டு போக மாட்டாங்க. இதுதான் இங்க நாம பார்க்கிற ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட்.

2013ல் கம்பெனி ஆரம்பிக்கிறப்போ இருந்த எங்களோட ஃபர்ஸ்ட் employee இன்னமும் இங்கே வேலை பார்த்துட்டு இருக்காங்க. இதுதான் நான் இங்க பாக்குற ஒரு பெரிய advandage என்று பதில் கூறுகிறார்.

பல ஐடி கம்பெனிகள் தொடங்கிய சிறிது நாட்களிலேயே இறங்குமுகத்தில் சந்திக்க என்ன காரணம் இருக்கும், உங்கள் ஐடியா எப்படி என்ற கேள்விக்கு,

படிப்படியாக முன்னேறுவதே சிறந்தது. கம்பெனி ஆரம்பித்த பத்து வருடங்களில் எந்த இடத்திலும் அவசரமாக செயல்பட்டதில்லை. உடனே அகலக்கால் வைப்பதும் சிக்கல்தான் என்று தெரிவித்தார்.

கோவை ஐடி மன்னன் சரவணகுமார் அவர்கள் அளித்த பதிலில், ஐடி துறையில் தடம் பதிக்க நினைக்கும் பலருக்கு உந்துதலாக இருக்கும் என்பதும், மேலும் எவ்வாறு ஐடியில் துறையில் சிக்கலைத் தவிர்க்கலாம் என்பதனைத்  தெளிவுப்படுத்தியுள்ளார்.

Tags : #KOVAI #BUSINESS #GOPINATH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Neeyanaana gopinath talk with kovai IT king saravanakumar | Lifestyle News.