'தம்பி விட்டுரு டா டேய்'... 'கதறிய 51 பேர்'... 'கொடூரத்தை ஃபேஸ்புக்கில் லைவ் செஞ்ச இளைஞர்'... உலகையே அதிரவைத்த சம்பவத்தில் வந்த தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் நடந்த அந்த கொடூர சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. உலகையே ஒரு நிமிடம் அசைத்துப் பார்த்தது அந்த கொடூரத் துப்பாக்கிச் சூடு சம்பவம். ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த 29 வயதான பிரெண்டன் டாரண்ட் என்ற இளைஞர் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் கொடூரமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.

மசூதிகளில் தொழுகை நடந்து கொண்டிருந்த நேரத்தில் அங்குப் புகுந்த அந்த இளைஞர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பப்ஜி கேமில் சுட்டுத் தள்ளுவதைப் போலச் சுட்டுக் கொன்றார். தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எவ்வளவோ கதறியும், அதைப்பற்றி சிறிதும் ஈவு இரக்கமின்றி கொன்றதோடு, தான் செய்த கொலையை ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பும் செய்தார் பிரெண்டன் டாரண்ட்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அவர் மீது, கொலை, கொலை முயற்சி மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த டாரண்ட் பின்பு குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் அவரை குற்றவாளியாக நீதிபதிகள் அறிவித்தனர். இந்நிலையில் டாரண்டுக்கு தண்டனை அறிவிப்பதற்கான வாதம் கிறைஸ்ட்சர்ச் நீதிமன்றத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.
அப்போது அரசு தரப்பில் டாரண்டுக்கு அதிகபட்ச தண்டனையாக பரோலில் வெளியே வர முடியாத வகையில் வாழ்நாள் சிறை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது. இந்நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் டாரண்டுக்கு பரோலில் கூட வெளியே வர முடியாது ஆயுள் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தது. உலகையே அதிரவைத்த கொடூர வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

மற்ற செய்திகள்
