நிலச்சரிவில் சிக்கி ‘கிரிக்கெட்’ வீராங்கனை உயிரிழப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநிலச்சரிவில் சிக்கி பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயாவின் மவ்னி கிழக்கு காசி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது வீடுகளின் மேல் மண் சரிந்து விழுந்ததில் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காணாமல் போயுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தெரிவித்த அதிகாரிகள், ‘30 வயதான கிரிக்கெட் வீராங்கனை ரசியா அகமதுவின் உடல் குப்பைகளில் இருந்து மீட்கப்பட்டது. மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளனர்’ என தெரிவித்துள்ளனர்.
ரசியா அகமது பல தேசிய போட்டிகளில் மேகாலயாவுக்காக விளையாடியுள்ளார். 2011-2012ம் ஆண்டு முதல் மேகாலயாவுக்காக ரசியா அகமது கிரிக்கெட் விளையாட தொடங்கினார். இயற்கை பேரழிவு காரணாமாக உயிரிழந்த ரசியாவுக்கு மேகாலயா கிரிக்கெட் அணியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ‘நாங்கள் ரசியாவை மிஸ் செய்வோம். அவளுடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்’ என கிரிக்கெட் வீராங்கனை ககோலி சக்ரவர்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.