“கட்சியில் இணைந்த கையோடு”.. “இடைத் தேர்தலில் போட்டியிடுகிறாரா?”.. யார் இந்த குஷூமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 05, 2020 02:36 PM

பெங்களூருவில் மரணம் அடைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவியின் மனைவி குஷூமா காங்கிரஸ் கட்சியில் நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக்கொண்டார்.

Karnataka dk ravi wife kusuma joins congress may compete in election

இதனை தொடர்ந்து ராஜராஜேஷ்வரி நகர் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு பெங்களூருவில், நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என அறியப்பட்ட டி.கே.ரவியின் மரணம் கிளர்ச்சியை உண்டுபண்ணியது.

அப்போது நடந்த மாணவர்கள் போராட்டத்தின் மத்தியில் பேசிய டி.கே.ரவியின் மனைவி குஷூமா தானு, சமூக பணியில் ஈடுபட விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.  டி.கே.ரவியின் மனைவியான குஷூமா காங்கிரஸ் நிர்வாகி ஹனுமந்த்ராயப்பாவின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வரா முன்னிலையில் குஷூமா காங்கிரஸில் இணைந்தார். இவருடன் ராஜராஜேஷ்வரி நகரைச் சேர்ந்த‌ நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும், இளைஞர்களும் காங்கிரஸில் இணைந்தனர்.

அப்போது பேசிய டி.கே.சிவகுமார், ராஜராஜேஷ்வரி நகர், சிரா தொகுதிகளுக்கு நவம்பர் 3‍ம் தேதி இடைத்தேர்தல் நடப்பதாகவும் இதேபோல் கட்சியில் இணைந்துள்ள டி.கே.ரவியின் மனைவி குஷூமாவுக்கு வாய்ப்பு வழங்குவது பற்றி மேலிடம் முடிவு செய்யும்' என்றார். இதனிடையே ராஜராஜேஷ்வரி தொகுதியில் குஷூமாவை நிறுத்துமாறு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் சிவகுமார் குறிப்பிட்டுள்ளார். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Karnataka dk ravi wife kusuma joins congress may compete in election | India News.