‘புல்லட் பைக்’ தான் டார்கெட்.. சிக்கிய ‘சென்னை’ ஏரோநாட்டிகல் இன்ஜினீயர்.. விசாரணையில் வெளியான ‘பகீர்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புல்லட் பைக்குகளை குறிவைத்து திருடி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து தொடர் புல்லட் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த தூத்துக்குடியை சேர்ந்த சுல்தான் லியாகத் அலி, மணிலையை சேர்ந்த பாஸ்கர், புதுப்பேட்டையை சேர்ந்த இஸ்மாயில் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 10 புல்லட் பைக்குகள், 6 உயர் ரக பைக்குகள் மற்றும் ஒரு காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனை அடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட பைக்குகளின் எஞ்சின் உள்ளிட்ட உதிரி பாகங்களை கோட்டூர்புரத்தை சேர்ந்த சோகன்குமார் என்பவரிடம் விற்றது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சோகன்குமாரை கைது செய்து போலீசார் விசாரணையில் செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோகன்குமார் ஒரு தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு கொட்டிவாக்கம் பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். ரேஆன் சிக்னேஷர் என்ற வலைதளத்தில் தான் தயார் செய்த ப்ராஜெட்களை விளம்பரம் செய்ததோடு, தனது நிறுவனத்தின் மூலம் பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு ப்ராஜெக்ட்களையும் செய்து கொடுத்தது தெரியவந்துள்ளது.
மேலும் திருடப்பட்ட பைக்குகளின் எஞ்சினை எடுத்துவிட்டு, வேறொரு எஞ்சினை பொருத்தி ஹைதராபாத், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு விற்று வந்துள்ளனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 39 புல்லட் பைக்குகளும், 6 உயர் ரக பைக்குகள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருடிய பைக்குகளை உடனடியாக உதிரி பாகங்களைப் பிரித்தெடுக்கும் கும்பல் புதுப்பேட்டையில் செயல்பட்டு வருவதாகவும், அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

மற்ற செய்திகள்
