வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே ‘பீரோவை’ உடைத்து கொள்ளை.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே பீரோவை உடைத்து 40 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் முல்லை நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன். இவர் அப்பகுதியில் கோழிகளுக்கான மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்றிரவு மனைவி மற்றும் மகன்களுடன் வீட்டின் முதல் தளத்தில் தூங்கியுள்ளனர். இதனை அடுத்து காலை எழுந்தபிறகு, தரை தளத்தின் அறையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளார். உடனே அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பீரோவில் இருந்த சுமார் 40 சவரன் தங்க நகைகள் கொள்ளை போயுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும் தங்க நகைகள் கொள்ளை போனது குறித்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். வீட்டிற்குள் ஆட்கள் இருக்கும் போதே பீரோவை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
