VIDEO: ‘இப்போ இறங்குடா’!.. இனி ‘எஸ்கேப்’ ஆக முடியாது.. சினிமாவை விஞ்சிய லாரி சேஸிங்.. மணப்பாறையை அதிரவைத்த நபர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்லாரியை திருடிச் சென்ற நபரை போலீசார் 60 கிலோமீட்டர் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டியில் அரிசி ஆலை நடத்தி வருபவர் நாகப்பன். இவர் தனது லாரியை ஆலை முன்பு நிறுத்தி வைத்திருந்துள்ளார். லாரி டிரைவர் சாப்பிடப்போயிருந்த நிலையில் திடீரென யாரோ மர்ம நபர் ஒருவர் லாரியை எடுத்து ஓட்டிச் சென்றுள்ளார். இதனை அரிசி ஆலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே தனது இருசக்கர வாகனத்தில் லாரியை பின் தொடர்ந்து சென்று, லாரியின் பின்புறத்தில் ஏறியுள்ளார். இதனை அடுத்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் போலீசார் லாரியை மறித்து நிறுத்தியுள்ளனர். ஆனால் போலீசார் லாரிக்கு அருகில் வருவதற்கு முன் மீண்டும் அந்த நபர் லாரியை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
இதனை அடுத்து போலீசார் காரில் அவரை துரத்திச் சென்றனர். சுமார் 60 கிலோ மீட்டர் வரை துரத்திச் சென்று திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் காந்திமார்க்கெட் அருகே லாரியை மடக்கிப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து லாரியை திருட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் விருதுநகரைச் சேர்ந்த பிச்சைமணி (43) என்பது தெரியவந்துள்ளது.
தற்போது அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமாவை விஞ்சும் அளவுக்கு சேஸிங் செய்து திருடிச்சென்ற லாரியை போலீசார் மடிக்கி பிடித்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
