'இப்டி ஆடுனா எப்படி தம்பி’... ‘ட்ரோல் செய்யும் ரசிகர்கள்’... ‘மோசமான ஃபார்மால் இளம் வீரரை கழட்டிவிட திட்டம்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர் ப்ரித்வி ஷாவுக்கு ஆடும் லெவன் அணியில் வாய்ப்பு கிடைக்காது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா காயம் குணமடைந்த நிலையில், கொரோனா விதிமுறைகளால், முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதனால், அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், பிரித்வி ஷா ஆகிய 3 பேரில் ஒருவரை துவக்க வீரராக களம் இறக்கலாம் என்று தேர்வுக் குழுவினர் முடிவு செய்து, அதற்காக பயிற்சி ஆட்டத்தில் பங்குபெற வைத்தனர்.
இதில், பயிற்சி ஆட்டத்தில் தேர்வுக்குகுவினர் மற்றும் ரசிகர்களை ப்ரித்வி ஷா தனது மோசமான ஆட்டத்தால் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். இத்தனைக்கும் இந்திய டெஸ்ட் அணி துவக்க வீரராக ப்ரித்வி ஷா தன் அறிமுகப் போட்டியில் சதம் அடித்தார். ஆனால், அதன்பின் அவர் சொல்லிக் கொள்ளும்படி எந்த போட்டியிலும் ஆடவில்லை. அடுத்த சச்சின், சேவாக் என்றெல்லாம் புகழப்பட்ட அவர் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய அவர் ஐபிஎல் போட்டியிலும் சொதப்பியதால் சில போட்டிகளில் நீக்கப்பட்டார். ப்ரித்வி ஷா ஃபார்ம் சரியில்லை என்று தெரிந்தும் அவரை ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வு செய்தது தேர்வுக் குழு. ரோகித் சர்மா முதல் சில போட்டிகளில் ஆட மாட்டார் என்பதால் துவக்க வீரராக ப்ரித்வி ஷாவை தேர்வு செய்தனர்.
அவர் பயற்சிப் போட்டியில் சிறப்பாக ஆடினால் போட்டிகளில் இடம் பெறுவார் என கருதப்பட்டது. 2 பயிற்சி போட்டிகளில் 4 இன்னிங்சில் ஆடிய அவர், 0, 19, 40, 3 ரன்கள் குவித்துள்ளார். மேலும் ஸ்விங் பந்துவீச்சில் அவர் எளிதாக ஆட்டமிழந்து விடுகிறார். அவர் கால்களை நகர்த்தாமல் ஆடவே முயற்சி செய்கிறார். சேவாக் அப்படித்தான் ஆடுவார். ஆனால், அப்படி ஆடியும் சேவாக் ரன் குவித்தார்.
ப்ரித்வி ஷா தொடர்ந்து சொதப்பி வருவதால் டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர். மேலும் ப்ரித்வி ஷாவின் ஆட்டத்தை, ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரோல் செய்து வருகின்றனர். அவருக்கு பதிலாக ஷுப்மன் கில் அல்லது மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Prithvi_Shaw when he faces Swing bowling. #INDvAUSA #AUSAvIND pic.twitter.com/yjJt0IFA6M
— Inning Star (@InningStar) December 12, 2020
Absolutely zero need to rush Prithvi Shaw into the regular 11. Let him go back to Ranji and fix his temperament. Those loose wafts need to go.
— Raaghav Ram (@idliwadachutney) December 12, 2020
You can't be serious to play Prithvi Shaw as a test opener. Clearly not ready. I don't know what approach Kohli-Shastri are trying this practice match but please don't do it in an actual test. Please.
— Shreyas (@niyamagaana) December 12, 2020