'கொரோனா மருந்து எனக் கூறி...' 'ஊமத்தை பூ மருந்து குடித்த...' '8 பேர் கவலைக்கிடம்...' "எதைக் குடுத்தாலும் குடிச்சிருவிங்களா..." 'வெறுத்துப் போன போலீசார்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 08, 2020 12:50 PM

கொரோனா வைரஸ் தடுப்புக்கு ஊமத்தை பூவை பயன்படுத்தி மருந்து தயாரித்து குடித்த 8 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

Eight people who ate jimsonweed for Corona medicine worried

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. சமூகப் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததுடன், சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்குமாறு குறிப்பிட்டு வருகிறது. மேலும், எதை செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என பொதுமக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக அறிவுறுத்தியும் வருகிறது.

ஆனால் சில இடங்களில் வதந்திகளையும், தவறான சிகிச்சை முறைகளையும், நம்பி மக்கள் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர்.

அந்த வகையில், ஆந்திர மாநிலம் சித்தூரில் கொரோனா வைரஸ் தடுப்புக்கு ஊமத்தை பூவை பயன்படுத்தி மருந்து தயாரித்து உட்கொண்ட 8 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான  செய்திகளை நம்பி நம்பகமில்லாத மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என மாநில அரசு பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை சித்தூர் காவல் துறையினர்  பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனா நோய்த் தொற்றுக்கு தற்போது, மலேரியாவை குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பரிசோதனை அடிப்படையில் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். இது, பலன் அளிக்கிறது என்பதற்கான அறிவியல்பூர்வமான முடிவுகள் இல்லை என்றாலும், ஓரளவுக்கு பயன் தரக்கூடியது என்பதால் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.