'நான் பெத்த மகனே' என்ன விட்டு எங்கையா போய்ட்ட...? '2 வருசமா ஆள காணல...' 'ஃபேஸ்புக்கில் வந்த ஒரு போட்டோ...' - உருகி கண்ணீர் வடித்த அம்மா...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 12, 2021 07:22 PM

புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஆனந்தம் (45). இவர் கடந்த 2 ஆண்டுகளாக நாகர்கோவில் பகுதிகளில் கேட்பாரற்று சுற்றித் திரிந்து வந்துள்ளார்.

mentally ill person love problem and reunited Facebook

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே சுற்றித் திரியும் இந்த நபருக்கு அப்பகுதி மக்கள் பரிதாபமாக எண்ணி உணவளித்து வந்தனர். கொரானோ ஊரடங்கு உத்தரவு காலங்களில் தினேஷ் என்பவர், வெளியூர் மனிதர்கள் பலருக்கு உணவு வழங்கியுள்ளார். உணவு வாங்கியதில் ஆனந்தும் ஒருவர். சமீபத்தில் ஆனந்த் உணவுப் பெற்ற புகைப்படம் பேஸ்புக்கில் தினேஷ் பதிவிட்டுள்ளார்.

இதைக்கண்ட ஆனந்தத்தின் சொந்தக்காரர்கள் உடனடியாக தினேஷை தொடர்புக்கொண்டு நாகர்கோவில் வந்து அவரைச் சந்தித்தனர். அப்போது ஆனந்தம் கிழிந்த ஆடையுடன் மிகவும் பரிதாபமாக இருந்தார். மகனின் தற்போதைய நிலைமையை பார்த்து அவருடைய அம்மா உருகி கண்ணீர் வடித்தார். நெடுநாட்களுக்கு பிறகு மகனைப் பார்த்த அவர் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டார்.

இதனையடுத்து ஆனந்தத்தை உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் குளிக்க வைத்து புதிய ஆடைகள் அணிவித்து அவரை, குடும்பத்தினர் சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். ஆனந்தம், புதுச்சேரியில் இருக்கும்போது ஒரு பெண்ணை காதலித்ததாகவும் வசதி இல்லாத காரணத்தால் அப்பெண்ணின் பெற்றோர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.

தன் காதலியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தால், பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆனந்தம் கேட்டுள்ளார். அப்போது அவரது உறவினர்கள் ஆனந்தம் தலையில் தாக்கியுள்ளனர். இதனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனந்தமை அவரது தாய் மற்றும் உறவினர்கள் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல நாகர்கோவில் போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள போலீசார் உதவியுள்ளனர்.

காதல் தோல்வியினால், மனநலம் பாதிக்கப்பட்டு, சுற்றி திரிந்தவர், முகநூல் மூலமாக குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mentally ill person love problem and reunited Facebook | Tamil Nadu News.