'நாலு பேரையுமே சின்சியரா லவ் பண்றேன்...' 'யார கல்யாணம் பண்றதுன்னே தெரியல...' 'இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கு, எட்றா அத...' - இப்படியும் ஒரு தீர்ப்பா...!
முகப்பு > செய்திகள் > இந்தியாராம்பூரில் பெண் ஒருவர் தான் காதலித்த நான்கு பேரில் ஒருவரை திருமணம் செய்ய சீட்டு குலுக்கி எடுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தாண்டா நகரத்தின் அஜீம்நகர் பகுதியில் வசிக்கும் 18 வயது பெண் ஒருவர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நான்கு இளைஞர்களுடன் பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் அந்த பெண் நால்வருடனும் வாழ முடிவு செய்து, ஐந்து பேரும் சேர்ந்து கிராமத்தை விட்டு ஓடியுள்ளனர். இரண்டு நாட்களாக 5 பேரும் வீட்டிற்கு வராததால் அவர்களின் குடும்பத்தார் போலீசில் புகார் அளிக்க முயன்றுள்ளனர்.
போலீசில் செல்ல வேண்டாம் என்று அப்பெண்ணின் குடும்பத்தினரைப் பஞ்சாயத்துத் தலைவர்கள் தடுத்துள்ளனர். இந்த சிக்கலுக்கு ஒரு முடிவைக் கொண்டு வரப் பஞ்சாயத்தையும் அவர்கள் கூட்டியுள்ளனர். அங்கு உனக்கு யாரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் என அப்பெண்ணின் கருத்தைக் கேட்டுள்ளனர். தனக்கு நான்கு பேரையும் பிடிக்கும் என்றும் அதில் ஒருவரை மட்டும் தேர்வு செய்ய முடியவில்லை என்றும் அப்பெண் பதிலளித்துள்ளார்.
கிராம பஞ்சாயத்தில் அந்த பெண் தான் நான்கு பேரையும் காதலிப்பதாகவும், ஆனால் யாரை திருமணம் செய்ய வேண்டும் என குழப்பத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்பின் கடைசியாக, பஞ்சாயத்து ஆட்கள் ஒரு சிறுவனை அழைத்து, நான்கு இளைஞர்களின் பெயர் சீட்டுகளை ஒரு பெட்டியில் வைத்து, ஒரு சீட்டை எடுக்கச் சொல்லியுள்ளனர்.
மேலும் சிறுவன் எடுத்த நான்கில் ஒருவருடன் அந்த பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்படுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அக்கிராம மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
