'இந்த நெலைமைல தான்...' 'இன்னும் அதிகமா காதலிக்கணும்...' 'ஓடி ஆடி காதலிச்சவங்க...' 'நடந்து 5 வருஷம் ஆயிடுச்சு...' - உருக வைக்கும் உன்னத காதல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த 5 ஆண்டுகளாக கோமாவில் உள்ள காதல் மனைவியை குழந்தையை போல் பாதுகாத்து வரும் கணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த ராகுலும் கோலார் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா என்பவரும் பெங்களூருவில் வேலை பார்க்கும் போது காதலித்தனர். இருவரும் வெவ்வேறு வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் திவ்யா கர்ப்பமானார். பிரசவத்திற்காக மாலூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அறுவை சிகிச்ைச செய்தால் மட்டுமே தாய்-சேயை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் கூறினர். அதை ராகுல் ஏற்று கொண்டார். நள்ளிரவில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. ஆனால் திவ்யாவுக்கு மயக்கம் தெளியாமல் இருந்தது. ஒருநாள், இருநாள் என்ற நிலை மாறி ஒருவாரம் கடந்தும் மயக்கம் தெளியாமல் இருந்ததுடன் மூச்சு விடுவதை தவிர உடலில் எந்த அசைவும் இல்லை.
இது குறித்து டாக்டர்களின் விசாரணை நடத்தியபோது, அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து அதிகம் கொடுத்ததால், கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர். இதை ேகட்டு அதிர்ச்சியடைந்த ராகுல், தனது மனைவியை காதலிக்கும்போது, எப்படி நேசித்தாரோ, அதை விட கூடுதலாக நேசம் காட்ட வேண்டும் என்று முடிவு செய்து வீட்டிற்கு அழைத்து வந்து தனி அறையில் அவரை வைத்து பராமரித்து வருகிறார்.
கடந்த 5 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ள திவ்யாவை குழந்தையை போல், தினமும் காலை தொடங்கி இரவு வரை அவரின் ஒவ்வொரு தேவையை பூர்த்தி செய்து வருகிறார். ராகுலின் இந்த செயல்பாடு தொட்ட கடத்துர் கிராமத்தினர் மத்தியில் மிகவும் பாராட்டை பெற்றுள்ளது. தற்போது பலர் தாமாக முன்வந்து ராகுல் மற்றும் திவ்யாவுக்கு உதவி செய்து வருவதுடன் மனைவியை கவனித்துவரும் ராகுலை பாராட்டி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
