இதோட அர்த்தம் உங்கள்ல யாருக்காச்சும் தெரியுமா...? டெய்லி குப்பைத்தொட்டியில ஒரு 'விசித்திர குறியீடு' கெடைக்குது...! - அதை கண்டுபிடிக்க பெண்மணி செய்த வைரல் காரியம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் வீட்டு குப்பை தொட்டியில் தினமும் எழுதப்பட்ட விசித்திர குறியீடுகளை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் பகிர்ந்துள்ளார்
அமெரிக்காவை சேர்ந்த ஜேட் என்ற பெண்மணி தினமும் காலையில் தனது குப்பைகளை கொட்டும் தொட்டியை திறக்கும் போது பனியில் எழுதப்பட்ட ஒரு விசித்திரமான செய்தியைக் கண்டுள்ளார். முதலில் இதனை விளையாட்டாக எடுத்துக்கொண்ட ஜேட் இதேபோல் தொடர்ச்சியாக நடக்கவே அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும், டிக்டாக்கில் இருக்கும் ஜெட், தனது குப்பைத் தொட்டியில் பனியில் எழுதப்பட்டிருப்பதை வீடியோவாக எடுத்தி டிக்டாக்கில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் '1எஃப்' என்று எழுதப்பட்டிருப்பதைப் பதிவு செய்து இது எதைக் குறிக்கக்கூடும் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
அவரின் இந்த வீடியோ சுமார் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது மற்றும் 944,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்று வைரலாகியது. ஆயிரக்கணக்கான மக்கள் பதிலளித்தனர், அந்தப் பெண் கவனமாக இருக்கவும் பாதுகாப்பாக இருக்கவும் வலியுறுத்தினார்.
சில வித்தியாசமான கமெண்ட்களும் இடப்பட்டிருந்து. அதில் ஒருவர் 'இது ஒரு பெண் என்று அர்த்தம், மேலும் 'நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள் என்று அர்த்தம்! கவனமாக இருங்கள்' எனவும் 'இது ஒரு மோசமான விஷயம் என்று நான் நினைக்கிறேன், எனவே பாதுகாப்பாக இருங்கள்' எனவும் பலர் கருத்து தெரிவித்தனர். .
இதனால் குழப்பமடைந்த ஜேட் காவல்துறையையும் அணுகியுள்ளார். ஆனால் போதிய தடயங்கள் ஏதும் கிடைக்காததால் காவல்துறையினரும் கவனமாக இருக்கும்படி சொன்னதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்து தற்போது வைரலாகியுள்ளது.