‘கொடுத்த முகவரில் யாரும் இல்லை’!.. பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய 4 பேர் ‘மாயம்’.. புதிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தும் சமயத்தில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய நான்கு பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதால் அந்நாட்டுடனான விமான சேவையை இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் நிறுத்தியுள்ளன. இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்புவோர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழகம் திரும்பியவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பரிசோதனை செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மேலும் 5 பேருக்கு தொற்று உறுது செய்யப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அதில், சென்னையில் 4 பேர், தஞ்சையில் 3 பேர் மற்றும் மதுரை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என 10 பேர் தொடர் மருத்து கண்காணிப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து வந்த 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 4 பேர் மட்டும் அவர்கள் அளித்த முகவரியில் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த 4 பேரை தேடும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில், அங்கிருந்து வந்த 4 பேர் மாயமானது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
