எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த தினம்!.. 'அதிமுக அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப் படுகிறது.
வருடந்தோறும் எம்ஜிஆர் பிறந்த நாளன்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து, தலைவர்கள் மரியாதை செலுத்துவது உண்டு.
மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் புரட்சித்தலைவர் MGR அவர்களது 104வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் MGR மருத்துவ பல்கலைக்கழக வளாகத்திலுள்ள புரட்சித்தலைவர் MGR அவர்களது திருவருவச் சிலை, திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/5vSHxVkxkJ
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) January 17, 2021
அவ்வகையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அதிமுக கட்சியினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உடன் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலரும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அதிமுகவின் கட்சி கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரும் சேர்ந்து ஏற்றி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்த செய்தியாளர்கள், கட்சித் தொண்டர் உள்ளிட்டவர்களுக்கு எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கப்பட்டது.