“இந்த பீக் டிராஃபிக்கை சமாளிக்க முடியல..UNDERDOG படத்துல வர்ற மாதிரி!”.. ‘வாட்ஸ் ஆப் சர்ச்சையால்’ மொத்தமாக ‘படையெடுத்த’ பயனாளர்கள்.. திணறிப் போன ‘பிரபல’ செயலி.. இப்போது சொன்ன நற்செய்தி!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Behindwoods News Bureau | Jan 17, 2021 12:14 PM

பிரபல மெசேஜிங் செயலியான WhatsAppசமீபத்தில் புதிய பிரைவசி கொள்கையை அறிவித்தது. இந்த புதிய பிரைவசி கொள்கையின் மூலம் தனி உரிமை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பயனாளர்கள் அச்சமடைந்தனர். மேலும் வாட்ஸ் ஆப் தம் பயனர்களின் தகவல்களை ஃபேஸ்புக்கிற்கு பகிர்வதாக அவர்கள் பயம் கொள்ளத் தொடங்கினர்.

Like underdog training, we learned popular messaging app traffic peak

எனினும் பயனர்களின் தகவல்கள் பேஸ்புக்கிற்கு பகிரப் படாது; குழுக்கள் தனித்து செயல்பட முடியும்; வாட்ஸ் ஆப் பயனர்களின் சாட்டிங்கை கண்காணிக்காது; பயனாளர்களின் தனியுரிமை பாதுகாப்புக்கு எவ்வித பாதகமும் இல்லை என்றும் வதந்திகளை கட்டுப்படுத்துவது தான் இதில் உள்ள 100 சதவீத நோக்கம் என்றும் வாட்ஸ் ஆப் விளக்கம் அளித்திருந்தது.

Like underdog training, we learned popular messaging app traffic peak

தொடர்புடைய செய்திகள்:- ‘புதிய பிரைவேசி பாலிசி சர்ச்சை’.. “100% தெளிவாகுங்கள்.. எங்க நோக்கம் இதுதான்!” - WhatsApp-ன் அதிகாரப்பூர்வ விளக்கம்!

ஆனாலும் இதனை ஏற்க அல்லது புரிந்துகொள்ள மனமில்லாத பலரும் வாட்ஸ் ஆப்புக்கு மாற்றாக வேறு செயல்களை நோக்கி பயனாளர்கள் நகரத் தொடங்கினர். இதே நேரத்தில் டெஸ்லா கார் நிறுவனத்தின் அதிபர் எலன் மஸ்க், தம் ட்விட்டர் பக்கத்தில் சிக்னல் செயலியை பயன்படுத்த சொல்லி ஆலோசனை கூறினார். இதனை அடுத்து பலரும் ஒரே நேரத்தில் சிக்னல் செயலியை நோக்கி புறப்பட்டனர். இதனால் வாட்ஸ் ஆப்புக்கு நிகராக தற்போது சிக்னல் செயலியை நோக்கி மக்கள் படையெடுத்து புறப்பட்டனர்.

Like underdog training, we learned popular messaging app traffic peak

தொடர்புடைய செய்திகள்:- ‘அந்த மனுசன் சொன்னது ஒன்னு... இவங்க புரிஞ்சுகிட்டது ஒன்னு!’ - வாட்ஸ் ஆப் பிரைவேசி பாலிசி எதிரொலி!.. ‘எலன் மஸ்க்’ ட்வீட்டை அடுத்து நடந்த ‘வேடிக்கை’!

இதனால் கடந்த 2 நாட்களாக சிக்னலில் பெரும் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு கொஞ்ச நேரம் அந்த செயலியை பயன்படுத்த முடியாமல் போனது. இதுபற்றி ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக சில தொழில்நுட்ப சிரமங்களை சந்தித்து வருவதாகவும் மிக விரைவில் அவற்றை மீண்டும் செய்வதாகவும் சிக்னல் செயலி நிர்வாகம் பதிவிட்டு இருந்தது.

சுமார் 2 நாட்களாக இப்படியான பிரச்சினை போய்க் கொண்டிருந்த நிலையில் சிக்னல் செயலியை, பயனாளர்கள் செயலின் மேற்புறத்தில் உள்ள ரீசெட் செக்யூர் பட்டனை அழுத்துமாறும், அதன் பிறகு இந்த சிக்கல்கள் களைந்து சிக்னல் செயலி அப்டேட் ஆகிவிடும் என்றும் சிக்னல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது. அதே நேரத்தில் சிக்னல் பயனாளர்களுக்கு சாட்டிங் பிரைவசி பாதுகாக்கப்படும் என்றும், அதே சமயம் குறிப்பிட்ட ஒரு நபரின் சாட் பேக் அப்பை மீட்க முடியாமல் போகலாம் என்றும் சிக்னல் தெரிவித்திருந்தது.

Like underdog training, we learned popular messaging app traffic peak

இந்த நிலையில் இன்று காலை, “சிக்னல் திரும்ப வந்தது!” என சிக்னல் அறிவித்துள்ளது. இதுபற்றிய தமது ட்விட்டர் பக்கத்தில் சிக்னல் செயலின் தலைமை அறிவித்திருந்ததுபடி,  “புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான UnderDog  திரைப்படத்தில் ஒரு புதிய சூழ்நிலை வந்தபோது அந்த வளர்ப்பு நாய் எப்படி ஒரு பயிற்சியை பெறுகிறதோ.. அதுபோல நாங்கள் நேற்று முதல் சில முக்கிய பயிற்சிகளை பெறுகிறோம்.. அமைதி காக்கும் மில்லியன் கணக்கான சிக்னல் பயனாளர்களுக்கு நன்றி. 

எங்கள் பயனாளர்கள் ஆகிய உங்களது புரிந்து கொள்ளும் திறன் எங்களுக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கிறது. உங்களுக்கான திறன்களை நாங்கள் மேம்படுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன் UnderDog திரைப்படத்தின் மாண்டேஜ் காட்சியையும் சேர்த்து அந்த ட்வீட்டில் பகிரப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Like underdog training, we learned popular messaging app traffic peak | Technology News.