'சோசியல் மீடியால இருக்குற பெண்கள் தான் இவரோட மெயின் டார்கெட்...' 'இங்கு உள்ளாடைகள் இலவசம்...' - இந்த விளம்பரத்திற்கு பின்னாடி இருந்த வக்கிர திட்டம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉள்ளாடை விளம்பரத்திற்கு எனக் கூறி இளம் பெண்களிடம் அந்தரங்க புகைப்படங்களை கேட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அகமதாபாத்தின் சந்கேதா பகுதியைச் சேர்ந்த 25 வயதான சூரஜ் கேவ்லே என்ற இளைஞர், சமூகவலைத்தளம் மூலம் 18 வயது பெண்ணை தொடர்பு கொண்டு விளம்பரத்திற்காக இலவசமாக உள்ளாடைகள் தருவதாக கூறி பேசியிருக்கிறார்.
மேலும் இந்த விளம்பரத்திற்காக அப்பெண்ணின் சுய விவரங்களை தருமாறும், உள்ளாடை அணிந்து அந்த புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு தொடர்ந்து தொல்லை அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அகமதாபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசாரை அணுகி புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பேரில் சூரஜ் கேவ்லேவை காவல்துறையினர் கைது செய்த போலீசார் அந்த இளைஞர் மீது 420 (மோசடி), 406 (நம்பிக்கை மோசடி, 354 டி (பின் தொடர்ந்தல்), 500 (மான நஷ்டம் ஏற்படுத்துதல் மற்றும் ஐடி பிரிவு ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இது போல சில பெண்களுக்கும் அவர் வலை வீசியதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அகமதாபாத்தை சேர்ந்த ஒருவரை ஆன்லைனில் தொடர்பு கொண்ட 5.8 லட்ச ரூபாய் பணத்தை ஆன்லைன் மூலம் கடன் தருவதாக கூறி அதற்கான முன் மாதாந்திர செலுத்த தொகையாக 1.35 லட்சத்தையும் பெற்று ஏமாற்றியுள்ளார்.
போலி கடன் திட்டம், ஆன்லைனில் பெண்களை தொடர்பு கொண்டு 'இலவச உள்ளாடை திட்டம்' என பல பேரை மோசடி செய்த பலே ஆசாமி சூரஜ் கேவ்லேவை தற்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.