மனைவி முன்னிலையில் காதலியை கரம்பிடித்த கணவன்.. ஒரே வாரத்துல நடந்த சம்பவம்.. பரபரப்பில் திருப்பதி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமனைவி முன்னிலையில் காதலியை கரம்பிடித்த வாலிபரை காணவில்லை என தகவல்கள் வெளியாகி இருப்பது திருப்பதி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Tirupati man marries lover in front of wife missing Tirupati man marries lover in front of wife missing](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/tirupati-man-marries-lover-in-front-of-wife-missing.png)
Also Read | தாயாக மாறிய தந்தை.. மகள்கள் பசியோட இருக்க கூடாதுன்னு நெனச்ச அப்பா... நெகிழ வைக்கும் வீடியோ..!
திருப்பதி மாவட்டம், டக்கிலி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கல்யாண். சமூக வலை தளத்தில் அதிகம் பிரபலமான இவர், அடிக்கடி வீடியோ எடுத்து பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம் விமலா என்ற பெண்ணுடன் கல்யாணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
காதல்
நாளடைவில் இந்த பழக்கம், காதலாக மாறி உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கணவன் மனைவியான கல்யாண் மற்றும் விமலா ஆகியோர் இணைந்து வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் இவர்களை ஏராளமானோர் பின் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
விமலாவுக்கு முன்பு சமூக வலை தளத்தில் பிரபலமாக இருக்கும் விசாகபட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்ற பெண்ணை கல்யாண் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கு இடையே உருவான பிரச்சனை காரணமாக அவர்கள் பிரிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், நித்யஸ்ரீயை பிரிந்த கல்யாண், விமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
காதலியை கரம்பிடித்து வாலிபர்
இந்நிலையில் நித்யஸ்ரீ சமீபத்தில் விமலாவை சந்தித்து கல்யாண் மீதான தன்னுடைய காதல் குறித்து விவரித்ததுடன், கல்யாணை திருமணம் செய்துகொள்ள உதவும்படியும் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து, தனது கணவர் கல்யாணுக்கும் அவருடைய காதலி நித்யஸ்ரீக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார் விமலா. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில், கல்யாண் காணாமல்போய்விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மனைவி முன்னிலையில் காதலியை கரம்பிடித்த வாலிபர் திருமணம் நடைபெற்ற நிலையில் மாயமாகியிருப்பது திருப்பதி வட்டாரம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)