"ஐயையோ இதுமேலயா தோட்டத்தை வச்சிருந்தோம்".. வீட்டை பெருசாக்க நெனச்ச ஓனர்.. விஷயத்தை கேள்விப்பட்டு ஸ்பாட்டில் குவிந்த ஆராய்ச்சியாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்போர்ச்சுக்கல் நாட்டில் தனது வீட்டை பெரிதாக்க நினைத்திருக்கிறார் ஒருவர். இதற்காக அவர் கட்டுமான வேலைகளை துவங்கியவுடன் தான் பல மில்லியன் வருட மர்மம் வெளியேவந்திருக்கிறது. இதனால் ஆராய்ச்சியாளர்களும் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர்.
Also Read | பாகிஸ்தான் வீரர் சொன்ன வார்த்தை.. அடுத்த செகண்டே புன்னகைத்த கோலி.. "ஊரே அதுக்கு தான் பாஸ் வெயிட்டிங்"
கட்டுமானப்பணி
போர்ச்சுக்கல் நாட்டின் பொம்பல் நகரத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது வீட்டை பெரியதாக மாற்ற நினைத்திருக்கிறார். இதற்காக உள்ளூர் கட்டுமான நிறுவனம் ஒன்றையும் அவர் நாடியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் வேலைகள் துவங்கியிருக்கின்றன. அப்போது பூமிக்கு அடியில் வித்தியாசமான பொருட்கள் இருப்பதை அறிந்த பணியாளர்கள் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்க, அவருக்கும் அது என்ன என்பது தெரியவில்லை.
உடனடியாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கு அடியில் இருந்ததை பார்த்து திகைத்துப் போயிருக்கிறார்கள். காரணம் அது மிக பழமையான டைனோசரின் எலும்புக்கூடு. பூமியின் மிகப்பெரிய நிலவாழ் உயிரினமாக கருதப்படும் sauropod எனும் டைனோசரின் எலும்புக்கூடாக இது இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆராய்ச்சி
39 அடி உயரமும், 82 அடி நீளமும் கொண்ட இந்த எலும்புக்கூடு தற்போது சர்வதேச ஆய்வுக்குழுவால் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. போர்ச்சுகல் மற்றும் ஸ்பானிஷ் பழங்கால ஆராய்ச்சியாளர்கள் இந்த டைனோசர் எலும்புக்கூட்டை வெளியே எடுத்திருக்கின்றனர். இது 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். இதுகுறித்து பேசிய லிஸ்பன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் முனைவர் ஆய்வாளரான எலிசபெத் மலாஃபாயா,"டைனோசரின் விலா எலும்புகள் முழுவதும் கிடைப்பது மிகவும் அபூர்வமானது. இது 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த sauropod எனும் டைனோசரின் எலும்புக்கூடாக இருக்கலாம்" என்றார்.
போர்ச்சுகலில் மிகவும் பழமையான டைனோசர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு அருகில் உள்ள பகுதிகளிலும் ஆய்வினை தொடர இருக்கின்றனர் நிபுணர்கள்.
Also Read | விண்வெளி'ல இருந்து பாக்குறப்போ.. பூமி'ல தெரிஞ்ச பிரகாசமான புள்ளி.. "அது எந்த இடம் தெரியுமா?"