"எப்படி நடந்துச்சு'ன்னு இன்னும் கண்டுபிடிக்க முடியல".. திறக்கப்படாத வீட்டுக்குள் இருந்த தாய், மகன்.. பல மாசமா தொடரும் மர்மம்!!..
முகப்பு > செய்திகள் > உலகம்லிவர்பூல் பகுதியை அடுத்த Sefton Park என்னும் பகுதியில் வசித்து வந்தவர் ஜென்னி ஸ்மித். இவரும், இவரது மகனான ஜோசப்பும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில், மர்மமான முறையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டில் இறந்து கிடந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
ஜென்னி மற்றும் ஜோசப் ஆகிய இருவரும் ஒரே வீட்டில் வெவ்வேறு இடங்களில் உயிரிழந்து கிடந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அவர்களின் உடலை மீட்டு இதற்கான காரணத்தையும் போலீசார் விசாரித்து வந்தனர்.
இதில், ஜென்னியின் உடலை ஆய்வு செய்த போது, போதை பொருள் அதிக அளவு எடுத்துக் கொண்டதால் இறந்ததும் தெரிய வந்துள்ளது. ஜென்னி மற்றும் ஜோசப் ஆகிய ஒரு இருவரும் உயிரிழந்து இத்தனை மாதங்கள் கழித்தும் இதற்கான காரணம் என்ன என்பது தொடர்ந்து மர்மமாகவே நீடித்து வருகிறது. ஏனென்றால், ஜென்னி இதற்கு முன்பு வரை போதை பொருள் பயன்படுத்தியதே இல்லை என்பது தான்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் வசித்து வரும் ஜென்னியின் தந்தை மால்கோம், போலீசாருக்கு அழைத்து தனது மகள் மற்றும் பேரன் ஆகியோர் அழைப்பை எடுக்கவே இல்லை என கூறி உள்ளார். இதன் பின்னர், ஜென்னியின் வீட்டிற்கு சென்று போலீசார் தேடி பார்த்துள்ளனர். ஆனால், வீடு திறக்கவே இல்லை. இருவருக்கும் அழைத்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால், வீட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர் போலீசார்.
அப்போது தான் அவர்களின் உடல்களையும் போலீசார் கண்டெடுத்தனர். இது பற்றி பேசும் மால்கோம், எனது மகள் போதை பொருள் எடுக்கும் பழக்கமுள்ளவர் இல்லை என்றும் அவர்கள் மிகவும் ஜாலியாக தங்களின் நாட்களை கழிக்கும் குணம் உடையவர்கள் என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் போதை பொருள் எடுக்கும் பழக்கம் எதுவும் ஜென்னிக்கு கிடையாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில் எப்படி இறந்த சமயத்தில் மட்டும் இப்படி நடந்தது என்பது தான் போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. ஜென்னி இறந்து இத்தனை நாட்கள் ஆகியும் அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்ந்து மர்மமாக தான் நீடித்து வருகிறது.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து பல கட்டங்களில் தங்களின் விசாரணையை மேற்கொண்டு தான் வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
