Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top

தாயாக மாறிய தந்தை.. மகள்கள் பசியோட இருக்க கூடாதுன்னு நெனச்ச அப்பா... நெகிழ வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Sep 28, 2022 08:27 PM

ரயிலில் பசியுடன் இருக்கும் தன்னுடைய மகள்களுக்கு தந்தை ஒருவர் உணவை ஊட்டிவிடும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

Father feeds his daughters in moving train video goes viral

Also Read | இப்படியா பண்றது?.. சல்லி சல்லியா நொறுக்கிட்டாரு.. நாசாவின் மெகா திட்டம்.. மஸ்க் பகிர்ந்த மீம்..!

தந்தையின் அன்பு பெரும்பாலும் விரிவாக பேசப்படுவதில்லை. அன்னையின் அன்பை உலகம் கொண்டாடும் அளவுக்கு தந்தையின் பாசம் பற்றி பலரும் பேசுவதில்லை. எழுதாத கவிதை போல தேங்கும் தந்தையின் அன்பு எப்போதும் செயல் வடிவமாகவே இருந்து வந்திருக்கிறது. தாய்க்கும், குழந்தைகளுக்கும் அரணாக திகழும் தந்தைகள் தங்களுடைய சிறிய சிறிய செயல்களின் அடிப்படையிலேயே தங்கள் குடும்பத்தின் மீதும் குழந்தைகள் மீதும் உள்ள பாசத்தினை வெளிப்படுத்திவிடுகிறார்கள். அப்படியான நபர் ஒருவரின் வீடியோ தான் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Father feeds his daughters in moving train video goes viral

பயணம்

இந்த வீடியோவில் இரு சிறுமிகள் ஓடும் ரயிலில் அமர்ந்திருக்கிறார்கள். பொதுவாக நகரங்களில் பள்ளி செல்லும் குழந்தைகள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு சென்றுவிட வேண்டும் என்ற காரணத்தினால் காலை உணவை தவிர்த்துவிடுவதை நாம் பார்த்திருப்போம். அப்படி இந்த இரண்டு சிறுமிகளும் தங்களது காலை உணவை தவிர்த்து விட்டது போல தெரிகிறது. அப்படியான சூழ்நிலையில் தனது மகள்களின் பசியினை பொறுக்காத தந்தை டிபன் பாக்சில் உணவுடன் தனது மகள்களுடன் பயணம் செய்கிறார்.

Father feeds his daughters in moving train video goes viral

உணவு

ரயிலில் இருக்கையில் மகள்கள் அமர்ந்திருக்க, கீழே அமர்ந்திருக்கும் அந்த தந்தை உணவை தனது மகள்களுக்கு ஊட்டுகிறார். தந்தையின் அருகாமையில் பாதுகாப்பு உணர்வுடன் அமர்ந்திருக்கும் இரு சிறுமிகளும் சூழலை வேடிக்கை பார்த்தபடி சாப்பிட்டுக்கொண்டே தங்களது பயணத்தை தொடர்கிறார்கள்.

இந்த வீடியோ பதிவிடப்பட்டது முதலாக பலரும் இதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து தங்களுடைய தந்தை பற்றிய நினைவுகளை பதிவாக எழுதி வருகின்றனர்.

Also Read | ரூ.8 லட்சம் கோடி திட்டம்.. சிங்கப்பூரை விட பெரிய இடம்.. மீட்டிங்கில் கவுதம் அதானி சொல்லிய பிளான்.. திகைத்துப்போன தொழில்துறை ஜாம்பவான்கள்..!

Tags : #FATHER #FEEDS #DAUGHTERS #TRAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Father feeds his daughters in moving train video goes viral | Tamil Nadu News.