காதலியோட கைப்பையில 'அது' இருக்குனு தெரியாம 'சண்டை' போட்டுக்கிட்டு இருந்த காதலன்...! 'திடீர்னு கோவத்தோட உச்சிக்கு போன காதலி...' - 'அதிர' வைத்த சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலர்களுக்குள் ஏற்பட்ட சண்டையால் காதலனை பழை வாங்க காதலி செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ராகேஷ்(30) என்பவரும், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெயந்தி(27) என்பவரும் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் தீவிரமான காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில், இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் தனியாக கோவையில் உள்ள அபார்ட்மெண்ட் வாடைகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். ஜெயந்திக்கு ஏற்கனவே திருமணமாகி தனது கணவரை பிரிந்து வாழ்பவர். அதேப்போன்று ராகேஷிற்கும் இன்னொரு பெண்ணுடன் திருமணமாகி விட்டது. ஆனால், இந்த விஷயத்தை ராகேஷ் ஜெயந்தியிடம் சொல்லாமல் மறைத்து அவருடன் குடும்பம் நடத்தியுள்ளார்.
இதனையடுத்து ராகேஷிற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமான செய்தி ஜெயந்திக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயந்தி இதுகுறித்து ராகேஷுடன் சண்டை போட்டுள்ளார். வாக்குவாதமாக ஆரம்பித்த சண்டை பெரிய சண்டையானது. உடனே தனது பேக்கில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ராகேஷின் முகத்தில் ஊற்றினார். எரிந்த முகத்துடன் துடித்துக் கொண்டிருந்த அவரை, ஒரு கத்தியை எடுத்து மீண்டும் ராகேஷை குத்தியுள்ளார்.
இதன்காரணமாக, ராகேஷின் கண்ணிலும், கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஜெயந்தி தான் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை எண்ணிக்கை இல்லாமல் அதிகமாக விழுங்கி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ராகேஷ் மற்றும் ஜெயந்திக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
