ஐயோ, என்னமோ 'பெருசா' வருது பாருங்க..! யாருக்காவது இது 'என்ன'னு தெரியுதா? நடுக்கடலில் மிதந்து வந்த மர்மப்பொருள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூர்: கடலூர் கடல் பகுதியில் மிதந்து வந்த உருளை வடிவிலான மர்மப்பொருளால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மிதந்து வந்த மர்மப்பொருள்:
கடலூர் மாவட்டம் ராசாபேட்டை கடல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று எப்போதும் போல நேற்று அதிகாலை மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளார். அப்போது 8 நாட்டிகல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது சுமார் 5 அடி நீளமுள்ள பைபரால் ஆன உருளை வடிவ மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்ததுள்ளது. இதனைக் கண்ட மீனவர்கள் அந்த மிதவையை படகில் கட்டி கரைக்கு இழுத்து வந்துள்ளனர்.
மேலும், இந்த மர்ம பொருள் குறித்து அப்பகுதி கடலூர் துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த கடலூர் துறைமுக போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த கடலில் கிடைத்த மர்ம பொருள் குறித்து விசாரணை நடத்தினர்.
ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது:
அதோடு கடலில் கண்டறியப்பட்ட அந்த மர்ம பொருளை போலீசார் கைப்பற்றி சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த உருளை அவர்களிடம் ஒப்படைத்து ஆய்விற்கு அனுப்பியுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை:
இதுபற்றி காவல்துறை தரப்பில் விசாரணை நடந்தபோது, கடலில் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் போது, அதன் அருகாமையில் படகுகள் எதுவும் வந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில், கப்பலை சுற்றிலும் இதுபோன்ற இரும்பு உருளை போடப்படுவது வழக்கம். அதுதான் தற்போது கடலில் மிதந்து வந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கப்பல்களில் பணிகள் நடந்ததா?
வழக்கமாக ரப்பர் வடிவிலான பொருட்கள் தான் இதை போன்று கப்பல்களை சுற்றியுள்ள பயன்பாடுகளுக்கு உபயோகிக்கப்படும். அதே நேரத்தில் கப்பலில் பழுது பார்ப்பது உள்ளிட்ட ஏதேனும் ஒரு பணிகள் நடந்தால் தான் இதுபோன்று ரப்பர் விடிவலான உருளை பொருட்கள் பயன்படுத்தப்படுவதும் உண்டு. ஆனால் அதுபோன்று கப்பல்களின் பணி எதுவும் அண்மையில் நடைபெறவில்லை என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
இப்படியாக, கடலில் மிதந்து வந்த மர்மப்பொருள் குறித்த தகவல் மர்மமாகவே இருந்து வருகிறது. காவல்துறையினர் இதுகுறித்து ஏதேனும் தகவல் கிடைக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.