பண மழை பொழியுது.. அள்ளி குவிக்கும் கூகுளின் தாய் நிறுவனம்.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பங்குதாரர்கள்
முகப்பு > செய்திகள் > வணிகம்கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் விற்பனை பங்கு சுமார் 7500 கோடி டாலராக உயர்ந்த சம்பவம் அதன் பங்குதாரார்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் பங்குகள் வர்த்தக நேரத்திற்கு பிறகு 8%-க்கும் மெல் அதிவேகமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில்அந்த நிறுவனம் தனது பங்குகளை 1-க்கு 20 என்ற வகையில் பிரித்து தருவதாக கூறியுள்ளது.
ஆல்பாபெட்டின் விற்பனை பங்கு சுமார் 32% உயர்வு:
அதன்படி, ஆல்பபெட்டின் ஒரு பங்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக 19 பங்குகள் கிடைக்கும். இதன்மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கும் ஆல்பபெட்டின் பங்குகள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. இதுக்குறித்து வணிக நிபுணர்கள் கூறும் போது, 'கடந்த ஆண்டு நான்காவது காலாண்டில் ஆல்பாபெட்டின் விற்பனை பங்கு சுமார் 32% உயர்ந்து 7500 கோடி டாலராக உயர்ந்தது.
டிஜிட்டல் விளம்பரங்களில் செலவிட விரும்பும் வணிகர்கள்:
ஏனென்றால் சாதாரண நுகர்வோர் ஆடை மற்றும் பொழுதுபோக்குப் பொருட்களை கூகுளில் தேடுகின்றனர். அதோடு, சில்லறை வணிகம், நிதி, பொழுதுபோக்கு மற்றும் பயண விளம்பரதாரர்கள் அதிக விளம்பரத்திற்காக செலவிடுகிறார்கள். முக்கியமாக சொல்லவேண்டும் என்றால் கொரோனா பெருந்தொற்று பலரையும் ஆன்லைன் நோக்கி நகர்த்தியுள்ளது. இதனால் வணிகர்கள் அதிகம் டிஜிட்டல் விளம்பரங்களில் செலவிட விரும்புகின்றனர்.
அதன் காரணமாக கூகுள் நிறுவனம் இணைய விளம்பரங்களில் இருந்தே அதிகம் வருமானத்தை பெறுகிறது. வரும் காலத்திலும் இதன் வளர்ச்சி கணிக்க முடியாததாக இருக்கும்' எனக் கூறுகின்றனர்.
ஜியோ, பார்தி ஏர்டெல் நிறுவனங்களில் முதலீடு:
அண்மையில் இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து, பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன், அதாவது இந்திய மதிப்பில் 75 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது.
அதாவது, கடந்த 2020-ஆம் ஆண்டு ஆல்பபெட் நிறுவனம் மூலமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 7.73 சதவீத பங்குகளை 33,737 கோடிக்கு வாங்கியது. இதனைத் தொடர்ந்து கூகுள் தனது டிஜிட்டைசேஷன் நிதியிலிருந்து 700 மில்லியன் நிதியை, அதாவது இந்திய மதிப்பில் 5,260 கோடியை நேரடியாக முதலீடு செய்து, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 1.28 சதவீத பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.