'வங்கிக்குள் நுழைய முயன்ற பாம்பு'... 'அலறியபடி ஓடிய வாடிக்கையாளர்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 20, 2019 11:24 AM

பாரத ஸ்டேட் வங்கி கிளைக்குள் நல்ல பாம்பு நுழைந்ததால், வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் பீதியடைந்தனர்.

4 feet long snake in tn bank sbi branch in tiruttani

திருத்தணி ம.பொ.சி. சாலையில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை இயங்கி வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணியளவில், ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் இருந்தனர். அப்போது அந்த வங்கியில் பணிபுரியும் பெண் உதவியாளா் ஒருவர், வங்கி வாசலில் இருந்த தண்ணீா்த் தொட்டியில் பாா்த்தபோது, 4 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று வெளியே வந்தது. இதனால் வாடிக்கையாளா்கள், வங்கி ஊழியா்கள் அலறி அடித்து ஓடினா்.

இதையடுத்து திருத்தணி தீயணைப்பு நிலையத்துக்கு, வங்கி மேலாளர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தண்ணீா்த் தொட்டி அருகே பதுக்கியிருந்த பாம்பை, சுமார் அரை மணிநேரம் போராடி உயிருடன் பிடித்தனர். பின்னர், அந்த பாம்பை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். பாம்பு பிடிப்பட்டதை அடுத்து, வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இயல்புநிலைக்கு திரும்பினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Tags : #SNAKE #SBI #BRANCH