VIDEO ரெண்டு 'கோழி' தின்னதுக்கு.. இவ்ளோ அக்கப்போரா.. அந்த கொடுமையை 'நீங்களே' பாருங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Nov 18, 2019 09:54 PM
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் சமீபகாலத்தில் பாம்புகள் தான் மனிதர்களைக் கண்டு அஞ்சுகின்றன. நிலைமை அந்தளவு மோசமாக மாறி விட்டது.

அது உண்மை என்பதை நிரூபிப்பது போல வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஒரு மலைப்பாம்பை பிடித்து அதன் வாலை மிதித்துக்கொண்டு இளைஞர் ஒருவர் அந்த பாம்பின் உடலை பிதுக்கி எடுக்கிறார்.இளைஞரின் செயலால் பாம்பின் வாயில் இருந்து கோழிகள் கீழே வந்து விழுகிறது.
#அடேய்...
"பிரேக்பாஸ்ட் நல்ல முறையில் முடிந்ததை கெடுத்தியேடா பாவி மொமண்ட்...!"
"இந்த மாதிரி ஒரு ஆப்பரேஷனை (!) இப்பத்தான் முதல் முறை பார்க்கிறேன்....!"#வியக்கேன் 😳 pic.twitter.com/JCV1Gug7Zh
— விஷ்வா I Viswa I (@ChennaiViswa) November 15, 2019
ஒருவேளை கோழிகளை தின்ற கடுப்பில் இளைஞர் இவ்வாறு நடந்து கொள்கிறாரா? என்பது தெரியவில்லை. அதோடு பாம்பு என்ற அச்சம் சிறிதுமின்றி இளைஞர் அந்த பாம்பை கையாளும் விதம் அச்சத்துடன், ஆச்சரியத்தையும் ஒருசேர ஏற்படுத்துகிறது.
