'இழுத்து மூடுங்க!'.. மாவட்ட நிர்வாகத்தின் 'அதிரடி உத்தரவால்'.. நித்யானந்தா ஆசிரமத்துக்கு வந்த சோதனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 02, 2019 12:44 PM

குஜராத் மாநிலத்தின் ஹீராபூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை, அம்மாவட்ட நிர்வாகம் மூடியுள்ளது.  மேலும் ஆசிரமத்தில் தங்கியிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nithayanandas Gujarat ashram closed after leased land issue

ஆசிரமத்தின் மீதான தொடர் புகார்களைத் தொடர்ந்து அம்மாவட்ட நிர்வாகம் இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. முன்னதாக தனியார் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் இந்த ஆசிரமம் செயல்பட்டதாக புகார் எழுந்திருந்தது.

வெளிநாட்டுத் தீவுகளில் வசித்து வரும் நித்யானந்தா நேற்றுதான், சமஸ்கிருதத்தை சத்தியத்தைப் பேசவும், தமிழை பொதுவெளியில் பேசவும் பயன்படுத்த வேண்டும் என்று புதிய சத்சங்கத்தை வீடியோ வாயிலாக தெரிவித்து சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

இந்த நிலையில், ஆசிரம பதிவு மற்றும் அனுமதி உள்ளிட்ட மற்றும் பல நடைமுறை விதிகளை பின்பற்றாமல் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டது தொடர்பான புகார்கள் எழுந்தாகவும், அந்த புகார்களின் அடிப்படையிலேயே இந்த ஆசிரம முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : #NITHYANANDA