'நக்சல்கள் கோர தாக்குதல்'...பரிதாபமாக உயிரிழந்த...'கமாண்டோ படை வீரர்கள்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 01, 2019 02:46 PM

மகாராஷ்டிர மாநிலம் கட்ச்ரோலி பகுதியில் நக்சல்கள் நடத்திய கோர தாக்குதலில் 10 பாதுகாப்பு படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

Naxals blow up police vehicle in Maharashtra\'s Gadchiroli

பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் வாகனங்களில் மகாராஷ்டிர மாநிலம் கட்ச்ரோலி பகுதியில் சென்று கொண்டிருந்தார்கள்.அப்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் வெடிகுண்டுகளை நக்சல்கள் வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினார்கள்.இந்த கோர தாக்குதலில் 10 கமாண்டோ படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

இந்த கோர தாக்குதலில் 20 கமாண்டோ வீரர்கள் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே சம்பவம் நடந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் நக்சல்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags : #NAXALATTACK #ATTACKED #MAHARASHTRA #IED BLAST #GADCHIROLI