'செவ்வாய் கிரகத்துக்கு போற பொஸிசன்ல நிக்குது...' 'கொஞ்சம் லாபம் பார்க்க போய்...' - கடைசியில இப்படி ஆயிடுச்சு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 25, 2021 10:21 PM

அதிக பாரம் ஏற்றி வந்த மினி வேனுடன் ஓட்டுனரும் அந்தரத்தில் தொங்கி வானோக்கி நின்ற சம்பவம் திருப்பத்தூர் அருகே நடந்துள்ளது.

tirupattur mini truck which was carrying a heavy load

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் அருகே மினி வேன் ஒன்றின் முன்பகுதி தூக்கியவாறு சாலையில் நின்று கொண்டு இருந்தது. ஏதேனும் சாகசம் நடத்துகிறார்களா என்று ஆச்சரியப்பட்ட அங்கிருந்த பொதுமக்கள், வான் நோக்கி நின்ற வேனை பார்க்க கூட்டம் கூடினர்.

திருப்பத்தூரில் இருந்து ஒரு மொத்த வியாபார கடையில் அதிகளவில் தகர ஷீட்டுகள் மற்றும் இரும்பு குழாய்கள் போன்றவற்றை ஏற்றி கொண்டு மினி வேன் ஒன்று சென்றுள்ளது. அப்போது ஸ்பீடு பிரேக்கர் மீது ஏறி இறங்கியபோது அதிக பாரம் காரணமாக வண்டியின் முன்பகுதி தூக்கி கொண்டு நின்றுள்ளது.

அந்தரத்தில் தொங்கிக்கொண்டு நின்ற வண்டியின் முன்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் கீழே இறங்கி பார்த்துள்ளார். அதிக பாரம் பின்புறம் இருந்ததால் தூக்கி கொண்டதை அறிந்த ஓட்டுனர் வண்டியில் இருந்து ஒவ்வொரு தகடுகளாக எடுத்து கீழே வைத்துக் கொண்டிருந்தார். அதனைக் கண்ட அந்த பகுதி மக்களும் அவருக்கு உதவி செய்தனர். அனைத்து இரும்புத் தகடுகளும் எடுத்த பிறகு வாகனம் கீழே இறங்கியது.

சுமார் ஒரு டன் எடை கொண்ட பாரத்தை, லாபத்திற்கு ஆசைப்பட்டு 500 கிலோ மட்டுமே இழுக்கும் வேனில் ஏற்றியதால் இந்த சம்பவம் நடந்தது. அதன்பின்னர் வேறு ஒரு வாகனம் வரவழைத்து அந்த பொருட்களை அங்கிருந்து எடுத்து சென்றனர். 

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tirupattur mini truck which was carrying a heavy load | Tamil Nadu News.