'ஆண் குழந்தைகளை தாக்கும் மரபணு நோய்'... 'இந்தியாவின் முதல் 'GENE EXON SKIPPING THERAPY'... நம்ம மதுரையில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவிலேயே முதல் முறையாக Duchenne Muscular Dystrophyயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனுக்கு ‘Gene exon skipping therapy’ சிகிச்சை மதுரையில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுவன் இந்தியாவில் முதல் முறையாகவும், உலகில் 27வதாகவும் அந்த சிகிச்சையினை பெற்றுள்ளான்.

சிறுவன் மூன்றரை வயதாக இருக்கும்போது அவனுக்கு Duchenne Muscular Dystrophy இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது சிறுவனுக்கு வழங்கப்பட்டுள்ள சிகிச்சை என்பது மேம்படுத்தப்பட்ட, உயர்தரமான சிகிச்சை ஆகும். கென்மேக்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ராகவன் மற்றும் ஜோகோ மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த 'neuro rehab therapists' சிறுவனுக்கு 'digital neuro rehab therapy' அளித்து சிறுவனை மீட்டுள்ளார்கள்.
Duchenne Muscular Dystrophy என்பது ஒரு மரபணு நோயாகும். இது பெரும்பாலும் ஆண் குழந்தைகளை மட்டுமே தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
