‘அப்போ அரசுப் பள்ளி மாணவர்’.. ‘இப்போ ஐடி கம்பெனி ஓனர்’.. திரும்பிப் பார்க்க வச்ச ‘மதுரை’ இளைஞர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 24, 2021 02:28 PM

அரசுப் பள்ளியில் பயின்ற இளைஞர் ஒருவர் தற்போது தனியாக ஐடி கம்பெனி ஆரம்பித்து பலருக்கும் வேலை வழங்கி வருகிறார்.

Madurai govt school student become the owner of an IT company

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள உடன்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவா. குடும்ப வறுமை காரணமாக இவரின் பெற்றோர் கேரளாவில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் மதுரை விக்கிரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை சிவா முடித்துள்ளார்.

Madurai govt school student become the owner of an IT company

இதன் பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பட்டப்படிப்பு முடித்த அவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். இந்த சூழலில் தனியாக தொழில் தொடங்க நினைத்த சிவா, தனது பள்ளி நண்பருடன் சேர்ந்து மதுரையில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கி, முதற்கட்டமாக 30 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளார்.

Madurai govt school student become the owner of an IT company

தனது நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா, சுவீடன், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு, ஷேர் மார்க்கெட் அப்ளிகேஷன், அலர்ட் ஆப், iot உள்ளிட்ட ஏராளனமான மென்பொருட்களை தயார் செய்து சிவா வழங்கி வருகிறார். குறிப்பாக இவர் உருவாக்கிய, ஷேர் மார்க்கெட்டை குறித்து எளிமையாக புரிந்துகொள்ளும் வகையிலான ஆப் மற்றும் மாணவர்களின் நகர்வுகளை GPS இல்லாமல் கண்டறிய உதவும் Internet of thinks ஆப் உள்ளிட்டவை வரவேற்பை பெற்றுள்ளன.

Madurai govt school student become the owner of an IT company

இதுகுறித்து கூறிய சிவா, ‘என்னைபோல் அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம். அதனால் அதுபோன்ற மாணவர்களையே நாங்கள் வேலைக்கு எடுத்துள்ளோம். அவர்களுக்கு பயிற்சி வழங்கும் காலங்களில் கூட, ஊதியம் வழங்குவதால் மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. சென்னை, பெங்களூரு போல மதுரையிலும் தகவல் தொழில்நுட்ப துறையை வளர்த்தெடுத்து கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளோம். பட்டப்படிப்பு கட்டாயம் வேண்டும் என்றில்லை. நல்ல புரிதல், சமயோஜித சிந்தனை இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக வேலை வாய்ப்பு வழங்கப்படும்’ என அவர் கூறியுள்ளார்.

News Credits: Puthiyathalaimurai

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Madurai govt school student become the owner of an IT company | Tamil Nadu News.