'போட்ட திட்டத்தை கச்சிதமா...' 'முடிச்சிட்டு கெளம்புறப்போ பயங்கர பசி...' 'பரோட்டோ, சிக்கன் ஆர்டர் பண்ணிட்டு வெயிட்டிங்...' - அங்க தான் செம டிவிஸ்ட்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டூர் செல்வது போல பயணம் மேற்கொண்டு, கொள்ளையடிப்பதை தொழிலாக கொண்ட நபர்களை ஹோட்டலில் சாப்பிடும் போது போலீசார் கையும்களவுமாக பிடித்துள்ளனர்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் செந்தில்குமார் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள கே புதூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தன் நண்பரை காண நேற்று நெல்லை ரெட்டியார்பட்டியிலுள்ள இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் புறவழிச் சாலை வழியாக சென்றுள்ளார்.
அப்போது முகவரி கேட்பது போல 4 மர்ம நபர்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். செந்தில்குமாரும் அவர்களுக்கு வழி சொல்லிகொண்டிருக்கும் போது, திடீரென அந்த கும்பல் அவரை தாக்கி செந்தில்குமார் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகை 5,000 ரொக்கத்தையும் பறித்து கொண்டு காரில் தப்பி ஓடி விட்டனர்.
சுதாரித்துக்கொண்ட செந்தில்குமார் உடனடியாக நெல்லை காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தன் செல்போனில் இருந்து வழிப்பறி குறித்து தகவல் தெரிவித்தார். உடனடியாக, ரோந்து பணியில் இருந்த போலீசார் கொள்ளையர்களை தேடும் பணியில் பம்பரமாக சுற்றினர்.
அப்போது, நெல்லை புறவழிச்சாலை அருகேயுள்ள பிரபல அசைவ உணவகத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய காரின் அடையாளங்களுடன் ஒரு கார் நின்று கொண்டிருப்பதை காவல் ஆய்வாளர் ஆதாம் அலி பார்த்தார். மேலும், உணவகத்துக்குள் புகுந்த போலீஸார், செந்தில் குமார் கூறிய அடையாளங்களுடன் அங்கே இருந்த 4 பேரையும் வண்டியில் ஏற்றி விசாரித்துள்ளனர்.
அப்போது, கொள்ளையர்கள் 4 பேரும் செந்தில்குமாரிடம் கொள்ளை அடித்து விட்டு பசி காரணமாக புரோட்டா- சிக்கன் ஆர்டர் செய்து விட்டு காத்துக் கொண்டிருந்ததாக கூறியுள்ளனர். மேலும் கொள்ளையர்களின் பெயர் மனோஜ் குமார் ,ரகுராம் ,அபிசேக் ,பிரவின் குமார் என்பதும் இவர்கள் கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்ததுள்ளது.
இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், இந்த நால்வரும் மாண்டியாவில் இருந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் கொள்ளையர்கள் 4 பேரும் காரில் புறப்பட்டுள்ளனர். டூர் போவது போல சென்று கொள்ளையடிப்பது இவர்களின் வழக்கமாக இருந்துள்ளது. மேலும், அவர்களிடமிருந்து ஒரு சொகுசு கார் மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறிப்பிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
