‘நெஞ்சு முழுக்க இருந்த துக்கம்’.. பெற்றோர் எடுத்த திடமான முடிவு.. மதுரையில் நடந்த உருக்கமான சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் தானமாக பெறப்பட்டு 36 வயது பெண் மறுவாழ்வு பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே நடந்த கார் விபத்து ஒன்றில் தமிழ்மணி (21) என்ற இளைஞர் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தமிழ்மணி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து தமிழ்மணியின் இதயத்தை தானமாக வழங்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
இதனால் சென்னை ரேலா மருத்துவமனையில் இறுதிநிலை இதய செயலிழப்புடன் தீவிர சிசிக்சை பெற்று வந்த 36 வயது பெண்ணுக்கு தமிழ்மணியின் இதயம் பொருத்த முடிவு செய்யப்பட்டது. உடனே அறுவை சிகிச்சையின் மூலம் தமிழ்மணியின் இதயம் பிரித்து எடுக்கப்பட்டு விமானத்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு தயார் நிலையில் இருந்த ரேலா ஆஸ்பத்திரியின் இதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இயக்குனர் டாக்டர் சந்தீப் அத்தாவர் மற்றும் டாக்டர் கிம்ஸ் தலைமையிலான குழு சுமார் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அப்பெண்ணுக்கு வெற்றிகரமாக இதயத்தை பொருத்தினர். தற்போது அப்பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் இதயத்தால் பெண்ணுக்கு மறுவாழ்வு கிடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகன் மூளைச்சாவு அடைந்த துக்கத்திலும் இதயத்தை தானமாக கொடுக்க முன்வந்த இளைஞர் தமிழ்மணியின் பெற்றோருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
