‘இளைஞரால் கிடைத்த மறுவாழ்வு’!.. கண்ணீர் மல்க நன்றி சொன்ன பெண்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் தானமாக பெற்று மறுவாழ்வு கிடைத்த பெண் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுஜதா (34) என்ற பெண் இதயக்கோளாறு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், உடனடியாக அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது.
இந்த நிலையில் மதுரையில் விபத்து ஒன்றில் சிக்கி தமிழ்மணி (21) என்ற இளைஞர் மூளைச்சாவு அடைந்தார். இதனை அடுத்து இவரது இதயத்தை தானமாக வழங்க தமிழ்மணியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இருந்து சுமார் 50 நிமிடத்தில் தமிழ்மணியின் இதயம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.
இதனை அடுத்து கடந்த மாதம் 27-ம் தேதி சுஜதாவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுஜாதா தற்போது நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனக்கு இதயத்தை தானம் கொடுக்க முன் வந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு, சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு சுஜாதா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
