"இந்த மாதிரி இளைஞர்களும் இருக்காங்க".. மனசார பாராட்டிய மதுரை முத்து.. நெகிழ்ச்சி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனது குடும்பத்திற்காக வெளிநாட்டில் ஆண்டு கணக்காக தங்கி பணிபுரிந்த இளைஞரை பாராட்டி மதுரை முத்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
சின்னத்திரையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது திறமையால் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்தவர் மதுரை முத்து. கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு, காமெடி ஜங்ஷன், ராஜு வூட்ல பார்ட்டி, குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு சாம்பியன்ஸ், உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முத்திரை பதித்தவர் முத்து. இந்நிலையில் இவர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்கள் தங்களது வாழ்க்கையில் பல விஷயங்கள் குறித்து எப்போதும் கவலைகொள்வது உண்டு. சொந்த பந்தங்கள், குடும்பத்தினர் என அனைவரையும் விட்டுவிட்டு பொருள் ஈட்ட வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் ஒவ்வொரு பண்டிகையின்போதும், தங்களது வீட்டில் நடைபெறும் விசேஷங்களின் போதும் நிச்சயம் கவலைகொள்வர். அப்படி தனது 3 சகோதரிகளுக்கு திருமணம் செய்ய வெளிநாடு சென்று 7 வருட கடின உழைப்புக்கு பிறகு ஊருக்கு திரும்பும் இளைஞரை மதுரை முத்து பாராட்டி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் முத்து ஒரு இளைஞரின் அருகில் நிற்கிறார். அப்போது பேசும் முத்து,"வணக்கம். தம்பி மலேஷியாவில் இருந்து ஊருக்கு வர்றான். ரொம்ப பாராட்டப்பட வேண்டிய பையன். ஊருக்கு வந்து கிட்டத்தட்ட 7 வருஷம் கழிச்சு இப்போதான் சொந்த ஊருக்கு வர்றான். 3 அக்காவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சுட்டு, எல்லா கடமைகளையும் முடிச்சிட்டு கடைசியா இப்போ தனக்கு கல்யாணம் செஞ்சுக்க ஊருக்கு வந்திருக்கான். இந்த மாதிரி இளைஞர்களும் இருக்காங்க. இளைஞர்களுக்கு முன்னுதாரணமா இருக்கணும் தம்பி மாதிரி. 7 வருஷம் ஒரு தொடர்பும் இல்லாம இப்போ கிளம்புறான். இந்த தம்பி நாகராஜ் வணங்கப்பட வேண்டிய ஒரு பையன்" என்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.